புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மீண்டும் விஜய் மானத்தை வாங்கிய மக்கள் இயக்கம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட செயலாளர்

Actor Vijay: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கக்கூடிய விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் விஜய் குருதியாகம், விஜய் விழியகம், விஜய் பயிலகம் என மக்களுக்கு நல்ல நல்ல திட்டங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சமீப காலமாகவே வரிசையாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில் பலான தொழில் நடத்துவதாக கூறி விஜய் மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Also Read: லண்டனில் மாமியார் வீட்டு விருந்து முடித்தவுடன் விஜய் செய்யப் போகும் சம்பவம்.. ஆட்டம் காண போகும் அக்கட தேசம்

அவரது கடைக்கும் போலீசார் சீல் வைத்தனர் அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் மாவட்ட மாணவர் அணி செயலாளரும் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அருகே காலை நேரத்திலும் இரவு நேரத்திலும் சட்ட விரோதமான முறையில் மது பாட்டில்களை விற்றது தொடர்பாக நான்கு பேரை அந்த பகுதி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதாவது டாஸ்மார்க் மதுபான பாட்டில்களை காலை டாஸ்மார்க் திறப்பதற்கு முன்பதாகவும், இரவு நேரங்களில் கடை மூடிய பிறகும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததற்காக நான்கு பேரை தற்போது மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியாக நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாணவர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஜெயிலர் பட வசூலை தடுக்க போடும் ஸ்கெட்ச்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா, கேளுங்க தளபதி

இதனால் அப்பகுதி முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்தவர்களிடமிருந்து 45க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து மக்கள் மன்ற நிர்வாகிகள் கைது செய்யப்படுவதால் தளபதியின் மானமே போகுது என விஜய் ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இது மட்டுமல்ல விஜய் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை வைத்து தான் கோட்டையை பிடிக்க வேண்டும் என பிளான் போடுகிறார். ஆனால் இவர்களோ சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பனையூரில் மக்கள் மன்ற இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளை வெளுத்து வாங்கப் போகிறார். இனிமேல் தான் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜயின் இன்னொரு முகத்தை பார்க்க போகிறார்கள்.

Also Read: கைவிட்ட விஜய் தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளியான அப்டேட்

Trending News