தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உள்ளவர் தளபதி விஜய். ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இருந்ததைப் போல் இன்று விஜய்க்கு ரசிகர் கூட்டம் அதிகம். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவருடைய படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் இருக்கும்.
சினிமாவில் ரசிகர்களை ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் ஆடியன்ஸ் என பிரித்துப் பார்க்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனைகள் இருக்கும். அந்த வகையில் அந்த மூன்று சென்டரில் உள்ள ரசிகர்களின் எண்ணத்தையும் பூர்த்திசெய்ய வேண்டும். அதற்கு ஏற்றார் போல் தான் ஹீரோக்களும் சினிமாவில் நடிக்கின்றனர்.
அவ்வாறு விஜயை பற்றி ஒரு மேடையில் நடிகர் சத்யராஜ் உங்களுக்கு மூன்றுவித ரசிகர்களும் அதிகம். உங்களையே நம்பி இருக்கும் அந்த ரசிகர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என மேடையிலேயே ஒரு முறை சுருக்கென்று கேட்டுள்ளார். இப்படி அவர் மேடையில் கேட்டது விஜய்யின் ஆழ்மனதில் இடியாய் விழுந்திருக்கும் போல.
இதனால் அவருக்கு சிறிது அரசியல் ஆசை வந்துவிட்டது. சினிமாவையும், அரசியலையும் பிரிப்பது என்பது சாத்தியமற்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஹீரோக்கள் அரசியலில் வந்து சாதித்துள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களைப் போல விஜய் வெளிப்படையான அரசியல் நகர்வுகள் எதையும் செய்யவில்லை.
இப்பொழுது பின்னால் இருந்து அரசியலுக்கு வருவதற்காக வேலைகள் சில பண்ணுகிறார் என தெரிவிக்கின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால் வெளிப்படையாக அரசியலுக்கு வரலாம் என்ற திட்டம் வைத்துள்ளாராம்.
சமீபத்தில் விஜய், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இருவரின் சந்திப்பு சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.