பவன் கல்யாண் போல் தலையில் கொட்டப்படும் விஜய்.. தளபதிக்கு கிடைக்கப் போகும் மகுடம்

Vijay TMK Party: புதிதாக அரசியலுக்கு வரும் போது பவன் கல்யான்னுக்கு எல்லா பக்கமும் எதிர்ப்புதான் கிளம்பியது. சொந்த அண்ணன் சிரஞ்சீவியே நன்றாக நடிக்கிறாய், உனக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அரசியல் வேண்டாம், என்னை போல் காணாமல் போய்விடுவாய் என தடைகளை போட்டார்.

 ஆந்திரா மக்கள் படத்தில் மட்டுமே நடிகர்களை கொண்டாடுவார்கள் ஆனால் நிஜ வாழ்வில் ஏமாற்றி விடுவார்கள் என சிரஞ்சீவி அவருக்கு எவ்வளவோ அறிவுரை கூறியும் பவன் கல்யாண்கேட்கவில்லை. அரசியலில் இறங்கி ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 

இது ஒரு புறம் இருக்க படைபலம் மிக்க ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து போட்டி போட வேண்டும். ஆரம்பத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஜெயித்தவுடன் மக்களுக்காக ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்தார். தொடர்ந்து ஏறுமுகம் காட்டி  அனைத்து  இடங்களிலும் தனக்கு செல்வாக்கை ஏற்படுத்திய ஜெகன்மோகன் ரெட்டி ஒரே விஷயத்தால் மண்ணை கவ்வினார்.  

 ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருக்கும்போது,  முன்னாள் ஆந்திரா சிஎம் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தார். இது பெரும் எதிர்ப்பலைகளை  ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் தான் பவன் கல்யாண் சுதாரித்துக் கொண்டு சந்திரபாபு நாயுடு பக்கம் நின்றார்.

தளபதிக்கு கிடைக்கப் போகும் மகுடம்

 அதன் பின் பவன் கல்யாண், ஜனசேனா கட்சி  சந்திரபாபு நாயுடு மற்றும் பிஜேபி உடன் கூட்டணி போட்டு,  போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதை போல் தான் தமிழகத்தில் விஜய் கட்சி ஆரம்பித்ததும் தடை கற்களை போட்டார்கள். பவன் கல்யாணை போல் இப்பொழுது விஜய் மீது இதே எதிர்ப்பலைகளை வைக்கிறார்கள்.

விஜய், சினிமாவில் நடந்து கொள்வது போல் நடக்கிறார். ரசிகர்கள் அவரை திரையில் மட்டும் கொண்டாடுவார்கள், அரசியலில் தோற்றுவிடுவார் என்று பேசுகின்றனர்.இதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று அவருடைய பர்சனல் விஷயங்களையும், குடும்ப பிரச்சினைகளையும் இழுக்கிறார்கள். இப்படி பவன் கல்யாணை போல விஜய்யையும்  சீண்டுகிறார்கள்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்