வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்தின் வலது கையை வம்பு இழுக்கும் விஜய்.. தளபதி 68-ல் நடக்கும் கலோபரம்

Ajith – Vijay : தளபதி விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் செய்யும் அலும்பு பற்றிய தகவல் கசிந்து இருக்கிறது.

அதாவது வெங்கட்பிரபு படக்குழு என்றாலே எப்போதுமே கலகலப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுவும் விஜய் வெளியில் மிகவும் சாதுவாக இருந்தாலும் கேலி, கிண்டல் செய்வதில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லையாம். அந்த அளவுக்கு தளபதி 68 படபிடிப்பு தளம் கலோபரமாக சென்று கொண்டிருக்கிறது.

அதுவும் பிரேம்ஜியை ஓடவிட்டு வேடிக்கை பார்ப்பாராம் தளபதி. அதாவது ஏற்கனவே வெங்கட் பிரபு படக்குழு அஜித்துடன் இணைந்து மங்காத்தா படத்தில் பணியாற்றியுள்ளனர். அப்போது அந்த படப்பிடிப்பை பார்க்கும்போது கல்லூரியில் மாணவர்கள் எவ்வாறு கலாட்டா உடன் இருப்பார்களோ அப்படி தான் இருக்குமாம்.

Also Read : விஜய்யை சாவு கூட்டத்தில் அசிங்கப்படுத்தியதால் நடக்கப் போகும் விபரீதம்.. ஏற்கனவே நடந்த போர்க்களம்

இந்த சூழலில் தளபதி 68 படக்குழுவில் விஜய் பிரேம்ஜியை அஜித்தோடு வலது கை என்று வறுத்தெடுக்கிறாராம். அவர் செய்யும் கிண்டலுக்கு அப்பா ஆள விடுங்கடா என்று தலை தெரித்து ஓடுகிறாராம். இவ்வாறு படக்குழுவே கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக விஜய்யை பார்த்தாலே பிரேம்ஜி என்ன சொல்லி கலாய்ப்பாரோ என அலறடித்துக் கொண்டு ஓடுவாராம். அதுவும் இந்த வருடம் பிரேம்ஜிக்கு கல்யாணம் என்ற செய்தி சமீபத்தில் வெளியான நிலையில் இன்னும் விஜய் ஓட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read : 11 இயக்குனர்கள் நடித்த ஒரே படம்.. விஜய் பட இயக்குனர் துணிந்து எடுக்கப் போகும் இரண்டாம் பாகம்

Trending News