வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நங்கூரம் போல் போட்ட முதல் அஸ்திரம்.. விஜய்யிடம் இருந்து சீமானுக்கு பறந்த போன்

Vijay-Seeman: விஜய் இப்போது தளபதி 68ல் பிஸியாகி உள்ளார். இருப்பினும் அவருடைய மக்கள் இயக்கம் விஜய்யின் அரசியல் பயணத்திற்கான வேலைகளை ஒரு பக்கம் சத்தமில்லாமல் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த லியோ சக்ஸஸ் மீட்டில் கூட விஜய் இது குறித்து கப்பு முக்கியம் பிகிலு என கூறி இருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று விஜய்யிடம் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஃபோன் கால் பறந்துள்ளது. அதைத்தான் இப்போது அவருடைய கட்சித் தொண்டர்கள் சோசியல் மீடியாவில் வைரல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சீமான் இன்று தன்னுடைய 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே தற்போது விஜய்யும் அவருக்கு போன் போட்டு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

Also read: லியோ சக்ஸஸ் மீட்டிற்கு வராத சங்கீதா.! பயில்வான் கூறிய சீக்ரெட்டால் வெடிக்கும் சர்ச்சை

இது அவருடைய அரசியல் நகர்வுக்கான முதல் படியாகவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்றதுமே முதலில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறியது சீமான் தான். அதன் பிறகு லியோ வெளியீடு சமயத்தில் அவருக்கு ஆதரவாக சில சர்ச்சைகள் குறித்து பேசி இருந்தார்.

அதிலும் ட்ரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தைக்கு சீமான் ஆதரவு தரும் படி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இருவரும் கூட்டணி அமைக்க போகிறார்களா என்று கூட பேசப்பட்டது. ஆனால் தற்போது விஜய் அவருக்கு வாழ்த்து சொல்லியதை பார்க்கும்போது இது கிட்டத்தட்ட உறுதியாகும் என்று தெரிகிறது.

அந்த வகையில் 2026ல் வரப்போகும் தேர்தலை கணக்கிட்டு காய் நகர்த்தி வரும் விஜய் தன்னுடைய முதல் அஸ்திரத்தை நங்கூரமாக போட்டுள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து பல விஷயங்களை செய்யவும் அவர் ஆயத்தமாகி வருகிறாராம். அப்படி பார்த்தால் இவருடைய அரசியல் என்ட்ரி நிச்சயம் ஒரு புயலை கிளப்பும் என அவருடைய ரசிகர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர்.

Also read: விஜய்க்கு சொம்படிக்கும் 2 முரட்டு வில்லன்கள்.. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தளபதிக்கு வீசும் வலை 

Trending News