புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காவேரியிடம் காதலை சொல்ல தயாரான விஜய்.. ராகினி செய்த சகுனி வேலையால் ஏற்பட போகும் ட்விஸ்ட்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் காவேரி, நவீனை பார்த்து சந்தித்து பேசியதை ராகினி மறைந்து நின்று வீடியோ எடுத்து அதை விஜய் இடம் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் விஜய் ஆஃபீஸ் விட்டு வரும் பொழுது வீட்டில் அவரிடம் பேசுவதற்காக ராகினி காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது விஜய் வந்ததும் ராகினி, காவிரியும் நவீனம் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

உங்களை கல்யாணம் பண்ண பிறகும் எதற்கு நவீனை சந்திக்க வேண்டும். அப்படி என்றால் காவேரி மனதில் இன்னும் நவீன் தான் இருக்கிறானா என்று சில விஷயங்களை சொல்லி விஜய் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். அத்துடன் எடுத்த போட்டோவையும் விஜய் இடம் காட்டி விட்டார். ஆனால் இதையெல்லாம் பார்த்த விஜய், எல்லாத்தையும் அசால்டாக எடுத்தது போல் இது உனக்கு தேவையில்லாத வேலை.

காவிரியை பற்றி புலம்பித் தவிக்கும் விஜய்

காவேரி மற்றும் நவீனை பற்றி எனக்கு தெரியும். தேவையில்லாத வேலைகளை இதே மாதிரி பண்ணி என்னிடம் வந்து பேச முயற்சி பண்ணாதே என்று திட்டிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனாலும் விஜய் மனதிற்குள் ஏன் நம்மிடம் பொய் சொல்லி நவீனை சந்திக்க வேண்டும் என்று ஒரு கேள்வி எழ ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த காவேரி, விஜய்யை பார்த்து பேசுகிறார்.

அப்பொழுது விஜய் சரியாக பேசாமல் காவிரியை உதாசீனப்படுத்தி விடுகிறார். இதை பெரிசாக எடுத்துக் கொள்ளாத காவிரி, யமுனாவை பார்த்து நவீன் இடம் நான் எல்லாத்தையும் பேசி விட்டேன். அவர் சொன்னது உன்னுடைய படிப்பு நன்றாக முடித்து கலெக்டராக வேண்டும் என்று தான். அதுதான் அப்பா கண்ட கனவு நானும் அதை தான் ஆசைப்படுகிறேன்.

அதனால் இனி உன் படிப்பில் கவனம் செலுத்து நவீனுக்கும் உனக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று யமுனாவிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டார். பிறகு அடுத்த நொடியே நவீனிடம் இருந்து யமுனாவுக்கு மெசேஜ் வந்துவிட்டது. உடனே யமுனா சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டாடுகிறார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தனியாக இருந்து காவிரியை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது காவேரி சாப்பிடுவதற்கு கூப்பிடுகிறார். ஆனால் விஜய் எனக்கு வேண்டாம் பசியில்லை என்று சொல்லி காவிரியிடம் கோபமாக பேசுகிறார். அப்பொழுது காவேரி, நவீனை பார்த்தேன் என்று சொல்கிறார். உடனே விஜய், இதை நீ என்னிடம் நேரடியாகவே சொல்லிவிட்டு போயிருக்கலாமே.

ஏன் ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று பொய் சொல்லிட்டுப் போனாய் என்று கேட்கிறார். அதற்கு காவேரி, நான் பொய் எல்லாம் சொல்லல என்ன நடந்துச்சுன்னு சொல்றேன் என்று சொல்ல வருகிறார். அப்பொழுது விஜய், என்னிடம் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நீயும் நானும் ஒப்பந்தத்தின்படி தான் கல்யாணம் பண்ணி இருக்கிறோம்.

அதனால் உனக்கான விஷயத்தை நீயே பார்த்துக் கொள் என்று காவேரியிடம் கோபமாக பேசி திட்டி விடுகிறார். உடனே காவிரி, என்னிடம் கோபமே படமாட்டேன், மனச நோகடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டு இப்பொழுது இப்படி பேசுகிறீர்களே என்று சோகமாக பேசிவிட்டு காவிரியும் தூங்கி விடுகிறார். பிறகு விஜய், காவேரி என்னதான் சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் கேட்டிருக்கலாமே, ஏன் இப்படி பேசி விட்டோம் என்று வருந்துகிறார்.

ஆக மொத்தத்தில் ராகினி இவர்களுக்கு இடையில் பிரச்சனையே உண்டாக்க வேண்டும் என்று ஆதாரத்தை காட்டிய நிலையில் காவேரி மீது இப்பொழுதுதான் விஜய்க்கு உண்மையான காதல் வர ஆரம்பித்து விட்டது. இப்படியே போனால் கூடிய சீக்கிரத்தில் காவிரியிடம் காதலை விஜய் சொல்லிவிடுவார். ராகினி செஞ்ச சகுனி வேலையால் காவேரி மீது விஜய்க்கு இருக்கும் அளவுகடந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக பொறமையாக வெளிப்பட்டு வருகிறது.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News