வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

முடியாது என மறுத்த விஜய்.. ரஜினியை வைத்து காரியத்தை சாதித்த கேஎஸ் ரவிக்குமார்

சினிமாவில் ஒரு படம் தொடங்கப்படும் போது ஒரு நடிகருடன் தொடங்கி பின்னர் சில பிரச்சினைகளால் நின்று போய் அதில் இன்னொருவர் நடித்து வெளியாகும். அதில் சில படங்கள் பெரிய வெற்றியும் பெற்று உள்ளன. ஆனால் பெரும்பாலும் பெரிய நடிகர் ஒருவருக்கு இயற்றப்பட்ட கதையில் இனொரு பெரிய நடிகர் நடிப்பது என்பது நடந்திராத நிகழ்வு.

ரஜினி தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா அளவில் பெரிய நடிகராக உள்ளவர். படங்கள் நடிக்க துவங்கியது முதல் தற்போது வரை மிக பெரிய இடத்தில் வசூலிலும், வியாபாரத்தில் கோலோச்சி வருகிறார். இவரை தற்போது வியபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிஞ்சி வருபவர் தளபதி விஜய். அடுத்தடுத்த படங்களின் வெற்றி மூலம் விஜய் தற்போது ரஜினியை தாண்டி நிற்கிறார். சினிமா வல்லுனரான சித்ரா லக்ஷமணன் ஒரு பேட்டியில் தற்போது இருவருக்கும் இடையில் நடந்த சுவாரசிய விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா என்ற படம் அறிவிக்கப்பட்டது. தமிழில் முதல் முறை ஒரு முழு நீள அனிமேஷன் படமாக இது உருவாக இருந்தது. அறிவிக்கப்பட்ட பின் ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல கோளாறால் அவரால் நடிக்க முடியாத நிலை உருவானது. படத்தை அப்டியே கைவிட இருந்தனர். ஆனால் ரஜினிக்கும் ரவிக்குமாருக்கு நெருங்கிய நண்பரான பிரபு அப்போது இந்த படத்தை கைவிட வேண்டாம் என ஒரு யோசனை கூறியுள்ளார்.

இதே கதையை விஜய்யிடம் கூறி, அவருடன் படத்தை எடுக்குமாறு அவர் யோசனை கூற ரவிக்குமாரும் விஜய்யுடன் சில பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் என்னவோ பேச்சுவார்த்தையை தாண்டி இந்த படம் உருவாகவில்லை. அப்படியே கைவிடப்பட்டு, பின்னர் 2014இல் ரஜினியின் நடிப்பில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டு கோச்சடையான் என்ற பெயரில் வெளியானது.

இதனை கூறும் சித்ரா லக்ஷமணன், அது ஏன் நின்று போனது என தெரியவில்லை எனவும் கூறுகின்றார். ஒரு வேலை விஜய் நடித்து இந்த படம் வெளியாகிருந்தால் தமிழில் அனிமேஷன் படம் நடித்த முதல் ஹீரோ என்ற பெருமையை விஜய் பெற்று இருப்பார்.

ரஜினி, அண்ணாத்த படம் பிறகு தற்போது நெல்சனின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அவர் தன்னுடைய 66 படத்தை வம்ஷி படிப்பல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Trending News