புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Vijay : தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கூட்டணியா.? சீமானின் ஆசைக்கு தளபதி கூறிய பதில்

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை என்றாலும் 2026 இல் நடக்க உள்ள சட்டமன்றத்தில் போட்டியிட உள்ளார்.

காலம் காலமாக தமிழகத்தை திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. ஒரு மாற்று அரசியலுக்காக தான் தமிழக மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் பிரபலங்கள் பலரும் அவருடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு நாம் தமிழர் என்ற கட்சியை நடிகர் சீமான் தொடங்கி இருந்தார்.

சீமானின் ஆசைக்கு விஜய் இறங்குவாரா

தற்போது வரை இந்த கட்சி சார்பில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே நடிகை கஸ்தூரி பேட்டியில் விஜய் மற்றும் சீமான் ஒன்றாக போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி அவர்களுக்கு நிச்சயம் என்று கூறியிருந்தார். இப்போது சீமானும் அதையே கூறி இருக்கிறார்.

அதாவது 2026 இல் நானும், என் தம்பி விஜய்யும் ஒன்று சேர்வதற்காக காத்திருக்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அண்ணனும் தம்பியும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்.

அதேபோல் தான் விஜய்யும், நானும் சந்திப்பது இருக்கும் என்று சீமான் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் அரசியல் ஆலோசர்களை வைத்துதான் ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறார். இந்நிலையில் தனது கட்சியில் சீமானை இணைத்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.

ஆகையால் நாம் தமிழர் கட்சியுடன் தளபதி கூட்டணி வைக்க வாய்ப்புகள் குறைவு. நான் அரசியலில் இப்போது கத்துக் குட்டி. எனக்கு இப்போ கொஞ்சம் நேரம் கொடுங்க என்று சீமானிடம் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending News