திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா.? ஒரு ஓட்டு கூட தேறாது, எச்சரிக்கும் விசுவாசிகள்

Vijay’s Party Name: விஜய் தற்போது தீவிர அரசியல் களம் காண தயாராகிவிட்டார். அதற்கான நகர்வுகள் கடந்த சில வருடங்களாக சத்தம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது விஜய் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவதற்கே ரெடியாகி விட்டார்.

அந்த வகையில் மாணவர்களுக்கு உதவிகள் செய்ததிலிருந்து தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தது வரை அனைத்தும் அவருக்கான நன்மதிப்பை பெற்றுக் கொடுத்தது. அதை தொடர்ந்து தற்போது அவர் கட்சியின் பெயரை முடிவு செய்து அறிவிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

இது குறித்த செய்திகள் சோசியல் மீடியாவை கலக்கி வரும் நிலையில் விஜய்யின் கட்சி பெயர் இதுதான் என்ற தகவலும் உலா வந்து கொண்டிருக்கிறது. அதன்படி விஜய் தன்னுடைய கட்சிக்கு தமிழ்நாடு முன்னேற்ற கழகம் என்ற பெயரை வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Also read: விஜய் லிப்லாக் கொடுத்த 6 ஹீரோயின்கள்.. நச்சுன்னு ஜோவுக்கு கொடுத்த இச்

ஆனால் ஒரு சிலர் தமிழ்நாடு திராவிட முன்னேற்ற கழகம் என வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் எந்த பெயர் வைத்தாலும் சரிதான். ஆனால் திராவிட என்ற வார்த்தை மட்டும் வேண்டாம் என விஜய்யின் விசுவாசிகள் கூறி வருகிறார்களாம்.

ஏனென்றால் யார் கட்சியை தொடங்கினாலும் இந்த வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டு மக்கள் திராவிட என்ற வார்த்தையை கேட்டாலே டென்ஷன் ஆகிவிடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த வார்த்தையை மக்கள் வெறுக்கின்றனர்.

இதனால் இந்த பெயரை சேர்க்க வேண்டாம். அப்படி வைத்தால் ஒரு ஓட்டு கூட தேறாது என்று விஜய்க்கு நெருங்கிய பெரும்புள்ளிகள் அட்வைஸ் செய்து வருகிறார்கள். இதனால் விஜய் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் விஜய்யின் கட்சியின் பெயர் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: தளபதி விஜய் கௌரவத் தோற்றத்தில் நடித்த 3 படங்கள்.. பாலிவுட்டை கலக்கிய மாஸ் டான்ஸ்

Trending News