திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

மணிரத்னத்திற்கு நோ சொன்ன விஜய்.. வரலாற்று படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் கடந்த நிலையிலும் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் படத்தின் வசூலும் பல படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் விஜய் இந்த படத்தில் நடிக்காததற்கு என்ன காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது மணிரத்னம் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கடந்த 2011ம் ஆண்டு தொடங்க இருந்தார். அப்போது வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்காக விஜய் மற்றும் அருள்மொழிவர்மன் கேரக்டருக்காக மகேஷ் பாபு ஆகியோரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

Also read:விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!

மேலும் நந்தினியாக அனுஷ்காவும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடிக்க இருந்தனர். இதற்கான அனைத்து பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டு அனைவரும் சம்மதம் கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த சமயத்தில் விக்ரமுக்கு கரிகாலன் என்ற வேறொரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரொம்பவும் பவர்ஃபுல்லான கதையான அதில் நடிக்க அவர் சென்று விட்டாராம்.

இதனால் வருத்தம் அடைந்த மணிரத்னம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாத காரணத்தால் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கும் முடிவை கைவிட்டு இருக்கிறார். அப்போது அந்தப் படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்த விஜய்க்கு ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் விக்ரம் நடிக்க இருந்த கரிகாலன் திரைப்படமும் சில காரணங்களால் கைவிடப்பட்டிருக்கிறது.

Also read:பொட்டிக் கடைகளுக்கு வாழ்வு தந்த மணிரத்தினம்.. பொன்னியின் செல்வன் செய்த சாதனை

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து 2020 ஆம் ஆண்டு மீண்டும் அந்த படத்தை உருவாக்க மணிரத்தினம் முயற்சி செய்திருக்கிறார். அப்போது மறுபடியும் விஜய்யிடம் இது குறித்து கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் ஏற்கனவே புலி திரைப்படத்தில் நடித்த ஏமாற்றத்தால் இந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் விஜய் இனி இது போன்ற வரலாற்று கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறார். அதனால் தான் அவர் மணிரத்னம் கேட்டு பொழுது மறுப்பு கூறியிருக்கிறார்.

Also read:அடுத்தடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் 3 படங்கள்.. மணிரத்தினத்திற்கு விரித்த பிரம்மாண்ட வலை

Trending News