திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சர்க்காரை மிஞ்சும் தளபதி 69.. அவசரகதியில் இயக்குனரை லாக் செய்த விஜய்

Vijay selected his Thalapathy 69 movie Director: “நான் ஆணையிட்டால்! அது நடந்து விட்டால்! இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்!” என்ற ஒரு பாட்டை மட்டுமே வைத்து மூன்று முறை தமிழகத்தை ஆட்சி செய்தார் புரட்சித் தலைவர். இப்போது அவரது பாணியை பின்பற்றி  கடைசியாக அரசியலை மையமாக வைத்து உருவாகும் கதையில் நடிக்கப் போவதாக முடிவு எடுத்துள்ளார் தளபதி. 

தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் G.O.A.T திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மார்ச் மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து  ஜூன் மாதத்தில் பண்டிகையை ஒட்டி வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. 

தான் ஒப்புக்கொண்ட படத்தை  முடித்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால் G.O.A.T படத்திற்கு அடுத்தபடியாக விஜய் 69 திரைப்படம் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல், சினிமா இரண்டையும் பேலன்ஸ் பண்ணி ஒருவாறு கடகடவென தனது பணிகளை மேற்கொண்டு வரும் தளபதிக்கு தனது அடுத்த படம் அனைவரும் எதிர்பார்க்கும் படியாக தரமான பாலிடிக்ஸ் சம்பந்தமான கதையாக இருக்க வேண்டும் என்று ஆசை.

Also read: ரிஸ்க் எடுக்க பயந்து வேண்டாம் என சொன்ன விஜய்.. வெங்கட் பிரபுவை துரத்தி விட்ட தளபதி

இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் உடன் இடம் கதை கேட்ட விஜய், திருப்தி தராது போகவே மீண்டும் வேறு கதையை ரெடி பண்ண சொல்லி அனுப்பிவிட்டார். விஜய்யின் கால்சீட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கார்த்திக்கும் விடாது கதை எழுதி அவரை அப்ரோச் பண்ணி வருகிறார்.

விஜய் 69க்கான இயக்குனர்

அடுத்ததாக தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன், ஹச் வினோத், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி என இயக்குனர்களின் வரிசை நீண்டு கொண்டே சென்றது.

இந்நிலையில் வைகுண்டபுரத்தின் இயக்குனர் திரி விக்ரம் அவர்களுக்கும் ஹச் வினோத்திற்கும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டு வந்தபோது  இறுதியாக திரிவிக்ரம்மை  லாக் செய்துள்ளதாக தெரிகிறது.

RRR படத்தை தயாரித்த DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்காக விஜய்க்கு எப்போதும் இல்லாத வகையாக 250 கோடி வரை சம்பளமாக கொடுக்க முன்வந்துள்ளது.

ஏ ஆர் முருகதாஸின் சர்க்காரை போன்று மத்திய அரசு, மாநில அரசு,ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்தையும் கட்டம் கட்டி தனி ஒருவனாக  சிலிர்த்து எழும்படியாக விஜய் 69 அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

Also read: லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல திரும்பும் தளபதி.. தேவை இல்லாமல் ஆளும் அரசை வெறுப்பேத்தும் விஜய்

Trending News