விதவிதமான கதாபாத்திரங்கள் மூலமாகவும் தன்னுடைய தனித்துவமான நடிப்பாற்றலாலும் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. ஒரு படத்தில் வில்லனாக நடித்து விட்டால் அதன் பின் ஹீரோவாக நடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற எந்த ஒரு பயமும் இன்றி ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக தோன்றி அசத்தினார்.
தற்போது இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, சமந்தா என இரண்டு முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.
படத்தின் ப்ரமோஷனுக்காக அண்மையில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தன்னுடைய காதல் வாழ்க்கை, நடிப்பு அனுபவங்கள், நடிப்பிற்காக முயன்ற போது ஏற்பட்ட கஷ்டங்கள் என பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் நடுவில் ரசிகர்களிடம் “விஜய் சேதுபதியிடம் நீங்க கேட்க நினைக்கும் கேள்வி என்ன? என்பதற்கு ஒரு ரசிகர், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே. 62 படத்தில் நீங்கள் வில்லனாக நடிப்பீற்களா? என கேட்டிருந்தார்.
அதற்கு இப்போது வரை விக்னேஷ் என்னிடம் அது குறித்து ஏதும் கூறவில்லை, அவனுடைய இரண்டு படங்களில் தொடர்ந்து நடிப்பதால் நேரடியாக அவனிடம் அவ்வாறான ஒரு கேள்வி கேட்பதும் தவறு எனக் கூறினார்.
விஜய் சேதுபதி பேசியதிலிருந்து நாசுக்காக அவர் அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என கூறியுள்ளார். விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் கலக்கியிருந்த விஜய் சேதுபதி, அஜித்துடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் வேண்டுகோள். இந்த ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரஜினி, கமலை அடுத்து கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் ஃபகத் பாசிலும் இணைந்துள்ளார் என்பது மற்றோரு சிறப்பு. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் வருகிற ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் மட்டுமின்றி ஹிந்தியில் மாநகரம் ரீமேக், ஒரு வெப் சீரீஸ், தமிழில் மாமனிதன், விடுதலை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.