புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பகலில் இவராம், இரவில் அவராம்.. அலையாய், அலைந்து அல்லோலபடும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்று திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் யூகித்து உள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் ராம்போ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்ப குத்துவிளக்காக நயன்தாரா கண்மணி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாகவும், பப்பில் மாடல் அழகியாக உலாவரும் கதீஜா கதாபாத்திரத்தில் சமந்தா விஜய் சேதுபதியின் செட்டப் ஆகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரிடமும் காதலில் சிக்கி மாட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி கத்திஜாவா, கண்மணியா என்ற போராட்டத்தில் குழம்பும் கதாபாத்திரத்தில் இக்கதைகளம் அமைந்துள்ளது. ஆனால் நயன்தாராவும், சமந்தாவும் விஜய்சேதுபதியை விட்டுக்கொடுக்காமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வது போன்றும், எங்கே சென்றாலும் இருவரும் விஜய் சேதுபதியின் கைகளைக் கோர்த்துக் கொண்டு செல்வது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு வாழ்வுதான் என சற்று பொறாமையில் உறைந்து போயுள்ளனர்.

தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் டிரைலரை வைத்து ரசிகர்களும் திரை விமர்சகர்களும் யூகித்து வருகின்றனர். விஜய் சேதுபதி சமந்தாவுடன் இரவுகளில் நேரத்தை செலவிடுவது போன்றும், பகலில் நயன்தாராவுடன் நேரத்தை செலவிடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கண்மணி கதீஜாவிற்கு நடுவில் ராம்போ படுத்துக்கொள்ளும் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

சமந்தா கொண்டுவரும் காபியையும், நயன்தாரா கொண்டுவரும் டீயையும் ஒன்றாக கலந்து குடிக்கும் விஜய்சேதுபதியின் நடிப்பு பாராட்டப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் கிளைமாக்சில் ராம்போ யாரை கரம்பிடித்தார் என்பது தான் இப்படத்தின் ட்விஸ்ட் ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவாகரத்துக்குப் பின்னர், நடிகை சமந்தாவின் முதல் தமிழ் படமாக காத்துவாக்குல காதல் திரைப்படம் ரிலீஸ் ஆக ரிலீசாக உள்ளது. இதனால் ரசிகர்கள் சமந்தாவின் கம்பேக் நடிப்பை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல நடிகை நயன்தாரா தன் கணவனை கரம் பிடிக்க போராடும் அப்பாவி பெண்ணாகவும் விஜய்சேதுபதியின் காதலை வெளிப்படுத்தும் மனைவியாக அழகாக நடித்துள்ளார். அனிருத் இசையில் இடம்பெற்ற 222, டிப்பர் டப்பம் பாடல் உள்ளிட்ட பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே இப்படத்தின் திரையரங்கு டிஸ்ட்ரிபியூஷனை உதயநிதி ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் வாங்கிப் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News