பவானியை மிஞ்சும் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.. இந்த முறை சண்டை யாரு கூட தெரியுமா?

தமிழ்சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் ராஜு முருகனின் அடுத்த பட அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதாவது ஹெச் வினோத் குருநாதரான ராஜமுருகன் அடுத்ததாக கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். எனவே அந்தப் படத்திற்கு வில்லனாக விஜய் சேதுபதியை தேர்வு செய்திருக்கின்றனர்.

கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என ஒரு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என வரிசையாக தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான படங்களை நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜூ முருகனின் அடுத்த படத்தின் கதையை சொன்னதும் விஜய் சேதுபதியும் இதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் இந்தப் படத்திற்கு சம்பளத்தைக் கூட ஒத்துக்கொண்ட விஜய்சேதுபதிக்கு கால்ஷீட்டில் தான் குளறுபடி உள்ளதாம்.

ஏனென்றால் தற்போது 15 படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, இந்தப் படத்திற்கு கால்ஷீட் தருவது தாமதமாகும் எனவும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என இயக்குனர் ராஜுமுருகனிடம் கூறியிருக்கிறாராம்.

இதற்கு படக்குழுவும் இணங்க விஜய் சேதுபதியை மீண்டும் மாஸ்டர் படத்திற்குப் பிறகு பவானியாக பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த கதாபாத்திரம் பவானியை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தப் படத்தில் இன்னும் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்பதை குறித்த முழு விவரமும் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →