வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

விஜய் சேதுபதி இப்போதுதான் கொஞ்சம் இடைவேளை விட்டு வருகிறார். இல்லையென்றால் மாதத்திற்கு இரண்டு படங்கள் ரிலீசாகி கொண்டே இருக்கும். தொடர்ந்து அவர் முகத்தை பார்த்த மக்களுக்கு இப்போது கொஞ்சம் சலிப்பு தட்டி விட்டது, இப்பொழுது படம் நடிப்பதை அதிக படுத்தினாலும் ஒவ்வொரு படத்திற்கும் போதிய அவகாசம் விடுகிறார்.

விஜய் சேதுபதி போல் அந்த காலத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில் நிறைய படங்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து இப்படி ஒரே கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் சற்று வேற ட்ராக்கில் மாறுவோம் என்று வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

Also Read : ஜெய்சங்கர் போலவே எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒரே ஹீரோ.. மக்களை கவர்ந்த நாயகன்!

அப்படி ரஜினியுடன் முரட்டுக்காளை படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். அதன்பின் மக்கள் ஜெய்சங்கரை வில்லன் கதாபாத்திரத்தில் வைத்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அப்படி டிராக் மாறியதால், அதன்பின் அவர் நிறைய படங்களில் வில்லனாக நடித்தார். ஹீரோவாக தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.

இப்போது விஜய் சேதுபதி சினிமா கேரியரும் பழைய நடிகர் ஜெய்சங்கரை போல்தான் மாறி வருகிறது. ஜெய்சங்கர் எப்படி வில்லன் கதாபாத்திரத்திற்கு மாறினாரோ அதேபோல் விஜய் சேதுபதியும் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

Also Read : ஜெயலலிதாவுடன் நெருக்கம் காட்டிய ஜெய்சங்கர்.. கோபத்தில் துப்பாக்கியுடன் சென்ற காதலர்

இவர் முதன்முதலில் வில்லன் கதாபாத்திரம் நடித்து அதிர்ச்சியளித்தது விஜய்யின் மாஸ்டர் படம்தான். இவர் சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் படம் முழுவதும் வில்லனாக நடித்தது விஜய்யின் மாஸ்டர் படம் தான். அதன்பின் கமல் நடித்த விக்ரம் படத்திலும் முழு வில்லனாக நடித்திருந்தார்.

இப்பொழுது இவரை மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. இவர் ஹீரோவாக நடித்தாலும் அவர்களுக்கு அந்த வில்லன் கதாபாத்திரம் என் நினைவிற்கு வருகிறது. அவர் வில்லனாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்பொழுது மக்கள் விஜய்சேதுபதி வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read : ஒரே நாளில் 3 மற்றும் ஒரே நேரத்தில் 34 படங்களின் ஷூட்டிங்.. எம்ஜிஆர் செல்லப்பிள்ளையின் சாதனை

Trending News