செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

நண்பனை தூக்கி விட களம் இறங்கும் விஜய்சேதுபதி.. பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட திட்டம் போடும் இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தன்னுடைய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பிட்ட படங்களில் தான் நடிப்பேன் என்று இல்லாமல், தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியை பொருத்தமட்டிலும் பணத்திற்காகவும், வெற்றிக்காகவும் படம் பண்ணும் நடிகர்களுக்கு இடையே, நட்புக்காகவும், வளர்ந்து வரும் இயக்குனர்களை தூக்கி விடவும் நிறைய படங்களை பண்ணியிருக்கிறார். அந்த படங்களினால் அவருக்கு வெற்றி அல்லது தோல்வி கிடைத்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தியதே இல்லை. இதனாலேயே பல இயக்குனர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இவர் இருக்கிறார்.

Also Read:3 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹிரவாக பிரதீப் ரங்கராஜன்.. செகண்ட் ஹீரோவாய் களமிறங்கும் விஜய் சேதுபதி

தற்போது விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவனுக்காக களம் இறங்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே நானும் ரௌடி தான் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர்கள். அதன்பின்னர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் முக்கிய புள்ளிகளை வைத்து விக்னேஷ் காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்களாக நானும் ரௌடி தான் என்னும் படத்தின் கதையை கையில் வைத்துக்கொண்டு பல நடிகர்களிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தார். விஜய் சேதுபதியும் கதையின் மீது அந்த அளவு நம்பிக்கை இல்லை என்றாலும், விக்னேஷ் சிவனுக்காக மட்டுமே அந்த திரைப்படத்தை நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்தது. சினிமாவில் டல்லடிக்கும் விக்னேஷ் சிவனின் கேரியரை மீண்டும் தூக்கி விட விஜய் சேதுபதி தற்போது முடிவு எடுத்திருக்கிறார்.

Also Read:போகும் இடமெல்லாம் அந்த மாதிரி பட வாய்ப்பு கேட்கும் ஜெய்.. விஜய் சேதுபதி மாதிரி ஆசைப்பட்டா எப்படி ப்ரோ!

நடிகர் அஜித்துடன் பண்ண வேண்டிய படம் டிராப் ஆனதிலிருந்து விக்னேஷ் சிவனின் சினிமா கேரியர் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனுக்காக படம் பண்ண இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணியாக இந்த படம் அமைந்திருக்கிறது.

விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வழக்கமான விக்னேஷ் சிவன் படம் போல் இதுவும் ரொமான்டிக் காமெடியாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி உடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூன்றாவது முறையாக ஜோடி சேர இருக்கிறார்.

Also Read:விஜய் சேதுபதிக்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. 2 மணி நேரமா மண்டையை சொரிய வைத்த மக்கள் செல்வன்

Trending News