செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

அருணை தாறுமாறாக கண்டித்த விஜய் சேதுபதி.. லவ்வருக்காக போர் கொடியை தூக்கிய அர்ச்சனா

Bigg Boss Tamil 8 Archana and Arun: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை புதுசாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தாலும் போட்டியாளர்களை கண்டிக்கும் விதமாகவும் சரி, அவர்களிடம் பேசும் விதமும் கொஞ்சம் முரண்பாடாக தான் இருக்கிறது. இதெல்லாம் கமலிடம் இருந்து கொஞ்சம் தெரிந்து கொண்டே விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வந்திருக்கலாம்.

ஏனென்றால் எல்லா போட்டியாளர்களையும் எந்த அளவுக்கு மரியாதையாக நடத்தணும், எப்படி அவர்களை தட்டிக் கொடுத்து அனுசரித்து பேசணும் என்ற அணுகுமுறை எல்லாம் உலக நாயகனுக்கு மட்டுமே தெரியும். விஜய் சேதுபதிக்கு மனசுல என்னமோ இந்தப் போட்டியாளர்களுக்கு நாம் தான் பாஸ் என்ற நினைப்பில் ஒவ்வொருவரையும் அடக்குமுறை செய்து வருகிறார்.

அந்த வகையில் தப்பை தட்டிக் கேட்க வேண்டும் என்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அருணை வச்சு செய்து மிகப் பெரிய சம்பவத்தை செய்து விட்டார். லேபர் மற்றும் மேனேஜர் டாஸ்க் நடைபெற்ற பொழுது தீபக் சொன்ன ஒரு வார்த்தை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டார்.

ஆனால் அதற்கு பதிலாக அருணை சிக்க வைத்து அவர் பேசிய வார்த்தை மீது தவறு இருக்கிறது என்பது போல் லேபர் என்பது மிகவும் தரகுறைவான மட்டமான வேலை கிடையாது. சொன்னதற்கு நீங்க ஏன் அவ்வளவு ஆவேசமாக வீட்டில் பிரச்சனை பண்ணுங்க என்று அருண் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

ஆனால் அருண் அதற்கு பதில் அளித்தது என்னவென்றால் நான் லேபர் பற்றி தப்பாக எதையும் நினைச்சு பேசவில்லை. இந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் இந்த வீட்டையும் என்னுடைய குடும்பமாகத்தான் நான் பார்க்கிறேன். அப்படி இருக்கும்போது குடும்பத்தில் எதற்கு இந்த பாகுபாடு என்பதை தான் நான் என்னுடைய கருத்தாக முன் வைத்தேன் என்று அருண் அவருடைய விளக்கத்தை தெளிவாக கூறினார்.

ஆனால் அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காத விஜய் சேதுபதி, தான் பிடித்த முயலுக்கு மூணு காலு என்பதற்கு ஏற்ப அருண் நான் பேசுனது தவறுதான் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு விஜய் சேதுபதி அவருடைய கருத்தை திணித்தார். அது மட்டும் இல்லாமல் அந்த ஷோ முடித்த பிறகு விஷாலிடம் அருண் அவருடைய ஆதங்கத்தை கொட்டி பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று விஜய் சேதுபதி மைக் மூலமாக பேச ஆரம்பித்து விட்டார்.

அப்பொழுது கூட அவர் சொன்னது தான் சரி என்பதற்கு ஏற்ப அருணை திசை திருப்பி விட்டார். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பூகமாமாக வெடித்து வரும் நிலையில் அருணின் லவ்வர் மற்றும் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக இருக்கும் அர்ச்சனா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியது அருண் எந்த அர்த்தத்தில் பேசினார் எப்படி பேசினார் என்பதை நான் முழுமையாக பார்த்து இருக்கிறேன். அவர் அதை தவறான எண்ணத்தில் சொல்லவே இல்லை, ஆனால் விஜய் சேதுபதி அருண் ஏதோ குற்றம் பண்ணிருக்கிறார் என்பது போல் வச்சு பேசியதால் அருணுக்கு அதை தெளிவாக விளக்க முடியவில்லை.

ஆனால் அதே வார்த்தை தான் தீபக் பயன்படுத்தினார் அதை பெரிசு படுத்தாமல் விட்டது அருணை ஏதோ வேணுமென்றே அவமதித்தது போல் இருந்தது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அதற்கான திறமையை நாம் வளர்த்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

ஆனால் விஜய் சேதுபதி இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்று அர்ச்சனா, அருனுக்காக போர்க்கொடி தூக்கி விஜய் சேதுபதியை கண்டித்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அருண் மீது தவறு இருக்கோ இல்லையோ, ஆனால் அவர்தான் இப்பொழுது வரை அந்த வீட்டில் மனிதாபிமானத்துடன் அவருடைய விளையாட்டை விளையாண்டு வருகிறார்.

- Advertisement -

Trending News