விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதி செய்யும் காரியம்.. புது மாப்பிள்ளையாக ஜொலிக்கும் பெருமாள் வாத்தியார்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி பொருத்தவரை கதை பிடித்திருந்தால் அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் நடித்து வெற்றியைப் பார்க்கக் கூடியவர். அதனாலேயே ஒரு வருஷத்திற்கு அதிகமான படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகிறார். அந்த வகையில் இந்த வருடம் மார்ச் மாதம் வெளியான விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது வரவேற்பையும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் முழுமூச்சாக இயக்கிக் கொண்டு வருகிறார். இதில் விஜய் சேதுபதி கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதிரி முழுக்க முழுக்க அவருடைய கதையை காட்டப்படும். அப்பொழுது ஃபிளாஷ்பேக்கு ஏற்ற மாதிரி இவருடைய தோற்றத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவும் எப்படி என்றால் 1960களில் நடக்கும் காட்சிகளை படமாக்கப்பட்டு வருகிறது.

அப்படி என்றால் அதற்கு ஏற்ற மாதிரி விஜய் சேதுபதியை இளமைப் பருவத்தில் காட்டப்பட வேண்டும். அதனால் விஜய் எப்படி தளபதி 68 படத்திற்காக de-ageing டெக்னாலஜியை பயன்படுத்தி இளம் வயதுக்கு மாறினாரோ, அதேபோல இந்த டெக்னாலஜியை தற்போது விஜய் சேதுபதியும் பயன்படுத்துகிறார்.

Also read: விஜய் சேதுபதி நிலைமை நமக்கு வேணாம்.. அக்கட தேசம் படையெடுக்கும் அரக்கன்

அந்த வகையில் விடுதலை படத்தில் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் கதையை முழுமையாக கொண்டு வரப் போகிறார். இதில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அப்பொழுது ஏற்பட்ட அசம்பாவிதத்தால் மஞ்சு வாரியர் இறந்து விடுகிறார்.

அத்துடன் அங்கு இருக்கும் கிராம மக்களும் பல இடையூறுகளை அனுபவிக்கிறார்கள். இதனால் தான் விஜய் சேதுபதி பழிவாங்கும் எண்ணத்துடன் போராட்டத்தில் ஈடுபடுகிறார். என்பதை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு மட்டுமில்லாமல் சூரிக்கும் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் மறுபடியும் சூரியின் எதார்த்தமான நடிப்பை இப்படத்தின் மூலம் நாம் அனைவரும் காணலாம். மேலும் இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 2 கோடி போட்டு 35 கோடி வசூலை பார்த்த விஜய் சேதுபதி.. கம்மி காசுல பெத்த லாபம் பார்த்த 5 படங்கள்