ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்து வரும் விஜய் சேதுபதி.. கைவசம் இருக்கும் 6 படங்கள்

Vijay sethupathi Upcoming Movies: எந்த கேரக்டராக இருந்தாலும் கதாபாத்திரம் பிடித்திருந்தால் ஓகே என்று தைரியமாக முன்வந்து நடிக்கும் ஒரே ஹீரோ விஜய் சேதுபதி மட்டும் தான். ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல், மற்றும் வயதானவர் போல் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி இவரை மாத்திக்கொண்டு நடிப்பதில் சகலகலா வல்லவர். இப்படிப்பட்ட இவருடைய இன்னொரு பிளஸ் பாயிண்டு ஒரு வருடத்திற்கு 10 படங்களை ஒரு நேரத்தில் கொடுத்து வந்தார்.

அந்த வகையில் தற்போது இவரிடம் இருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம். கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படம் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதிக்கான முக்கியத்துவத்தை கொடுத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படம் ஏப்ரல் மே விடுமுறை மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கவில்லை.

Also read: தெருக்கோடியிலிருந்து கோபுரத்திற்கு வந்த விஜய் சேதுபதியின் அசர வைக்கும் சொத்தின் மதிப்பு!

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து வரவிருக்கும் படம் காந்தி டாக்ஸ். இப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இடம் பொருள் யாவல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. நிதி சிக்கல்கள் காரணமாக இப்படம் வெளியிடாமல் இருக்கிறது.

அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படமான டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். அடுத்து படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் பண்ணுவதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. இப்படி ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு காலில் சக்கரத்தை கட்டி பிஸியாக நடித்து வருகிறார்.

Also read: கடைசியா விஜய் சேதுபதி நம்பி இருக்கும் படம்.. ஹீரோவா நடிச்சு ஹிட் கொடுத்து அஞ்சு வருஷம் ஆச்சு

Trending News