செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

கம்மி பட்ஜெட், ஹாட்ரிக் லாபத்தை அசால்டாக பார்த்த விஜய் சேதுபதி.. 6 சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்க்க கூடிய திரைப்படங்களாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் பட்ஜெட்டை விட வசூலில் வெற்றியை கொடுத்திருக்கும். அப்படி வெற்றிபெற்ற 6 திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

பீட்சா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீஸன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஹாரர், த்ரில்லர் திரைப்படமாக வெளியான பீட்சா படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் வசூல் 8 கோடி ஆனாலும் இத்திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் ஒன்றரை கோடியில் எடுக்கப்பட்டதாம்.

Also read: இது என்னடா விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை.. விக்ரம் வேதா படத்தில் நடித்த பிரபலம் வேதனை

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் விஜய்சேதுபதியை தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராக அறிமுகப்படுத்திய திரைப்படம் என்று சொல்லலாம். என்ன ஆச்சு, கிரிக்கெட் விளையாடினோம் என்ற வசனம் இன்றளவும் ரசிகர்களிடம் பின்னிப் பெடல் எடுத்து வருகிறது. வெறும் 8 கோடி அளவிற்கு பட்ஜெட் ஒதுக்கி தயாரித்த நிலையில் கிட்டத்தட்ட 80 கோடி வரை இத்திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

சூது கவ்வும்: இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் இன்றளவும் பேராதரவைப் பெற்றது.சந்தோஷ் நாராயணனின் இசை இன்றைக்கும் பலரது மொபைல் போனில் ரிங்டோனாக உள்ளது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இப்படத்தின் பட்ஜெட் இரண்டு கோடியே ஆகும். ஆனால் 20 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிக் குவித்தது.

Also read: திரைத்துறைக்கு இந்த மாற்றம் அவசியம்.. உதாரணம் காட்டிய விஜய் சேதுபதி

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா: இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நந்திதா,பசுபதி உள்ளிட்டோர் நடித்திருப்பர். விஜய்சேதுபதி ஒருதலையாக நந்திதாவை காதலித்து அவருக்காக அவர் பேசும் வசனங்கள் இன்றளவும் ஒன்சைடு காதலர்களை திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் 4 கோடியில் எடுக்கப்பட்டது. ஆனால் ஆறு கோடி வரை வசூலை படைத்தது.

நானும் ரவுடி தான்: நயன்தாரா,விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் கமர்ஷியல் படமாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இத்திரைப்படத்தில் தான் நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் பதினைந்து கோடி ஆகும். ஆனால் வசூல் மட்டும் 55 கோடியை அள்ளிக் கொடுத்தது. அனிருத்தின் இசையும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகளை அள்ளிக் குவித்தது என்று சொல்லலாம்.

சேதுபதி: விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் சேதுபதியாக நடித்த திரைப்படம் இன்றளவும் விஜய் சேதுபதியின் சிறந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. ரம்யா நம்பீசன் விஜய் சேதுபதியின் மனைவியாக தனது நடிப்பை சிறப்பாக அமைத்திருப்பார். இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் பட்ஜெட் 8 கோடி ஆகும். ஆனால் 15 கோடி வரை இத்திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்தது.

Also read: பயங்கர பிஸியா இருக்கும் விஜய் சேதுபதி.. அடுத்து அடுத்து இருக்கும் படவாய்புகள்

- Advertisement -spot_img

Trending News