திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-க்கு தயாரான விஜய் சேதுபதி.. இயக்குனர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Vijay Sethupathi: விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களாக சகட்டுமேனிக்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது நின்று நிதானமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட் பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சினிமாவில் விஜய் சேதுபதியின் வளர்ச்சி அபரிவிதமானது. அவருடைய படங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும்.

அந்த வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்த எதார்த்தமான படம் தான் 96. இந்த படத்தில் ராம் மற்றும் ஜானு ஆகிய கதாபாத்திரங்களாகவே விஜய் சேதுபதி மற்றும் திரிஷா வாழ்ந்திருப்பார்கள். எதார்த்தமான மற்றும் ஒரு உணர்வுபூர்வமான காதல் கதையாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

பார்ட் 2 படத்திற்கு தயாராகும் விஜய் சேதுபதி

இந்நிலையில் 96 படத்திற்கு பிறகு பிரேம்குமார் மெய்யழகன் என்ற படத்தை எடுத்திருக்கிறார். இதில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுகாக ஊடகங்களில் பேசி வரும் பிரேம்குமார் 96 படத்தை பற்றி கூறியிருந்தார்.

அதாவது 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தற்போது எழுதிக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த படத்திற்கான கதையை விஜய் சேதுபதியின் மனைவி இடம் கூறி உள்ளதாகவும் பிரேம்குமார் அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார். மேலும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கால்ஷீட் கிடைக்க வேண்டும்.

எல்லாம் ஒன்றாக ஒத்துப்போன உடன் இந்த படம் தொடங்க உள்ளதாக இன்ப அதிர்ச்சியை பிரேம்குமார் கொடுத்து இருக்கிறார். முதல் பாகமே பக்கா திரைக்கதை அமைந்திருந்த நிலையில் இரண்டாம் பாகம் எதை நோக்கி, எப்படி எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பம்பரமாக சுற்றும் விஜய் சேதுபதி

Trending News