வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அசால்டாக ஐம்பதை தொட்ட விஜய் சேதுபதி.. விஜய், அஜித் இடத்துக்கு வரும் ஆபத்து

விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சைடு கேரக்டர்களில் நடித்து வந்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட காலம் வரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த விஜய் சேதுபதி இப்போது எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடித்து வருகிறார்.

அதன்படி சமீபத்தில் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்து அசத்தியிருந்தார். மேலும் விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாகவும் பட்டையை கிளப்பி இருந்தார். பொதுவாக டாப் நடிகர்கள் இதுபோன்ற மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்க மாட்டார்கள்.

Also Read: மீண்டும் வரும் சூது கவ்வும் பார்ட் 2.. ஆனா ஹீரோ விஜய்சேதுபதி இல்ல!

ஆனால் விஜய் சேதுபதி மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதால் எந்த கேரக்டர் இருந்தாலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் இப்போது தான் 60 வது படங்களை நெருங்கி உள்ளார்கள்.

விஜய் சேதுபதி சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே 50 வது படத்தில் நடிக்க உள்ளார். அதாவது வருடத்திற்கு குறைந்தபட்சம் விஜய் சேதுபதி 10 படங்களிலாவது நடித்து விடுகிறார். ஆகையால் இன்னும் சில வருடங்களிலேயே நூறாவது படத்தை விஜய் சேதுபதி நெருங்கி விடுவார்.

Also Read: நெருங்க முடியாத உயரத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.. 3 ஆண்டுகளாக காத்திருக்கும் தேசிய விருது இயக்குனர்

ஆனால் அஜித், விஜய் போன்ற நடிகர்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்கள். தற்போது அவர்களின் இடத்திற்கு விஜய் சேதுபதியால் ஆபத்து வந்துள்ளது. மேலும் இவரின் ஐம்பதாவது படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்குகிறார்.

மேலும் மகாராஜா என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுதன் தயாரிக்கிறார். மகாராஜா படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தைப் பற்றிய அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Also Read: ஒரு வழியா தமிழுக்கு வந்த அக்கட தேசத்து பைங்கிளி.. விஜய் சேதுபதி மகளுக்கு அடித்த ஜாக்பாட்

Trending News