ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ஒன் மேன் ஆர்மியாக அதிரடி காட்டும் விஜய் சேதுபதி.. முதல் நாள் வசூலை சிம்மாசனம் போட்டு அள்ளும் மகராஜா

Vijay Sethupathi in Maharaja: எடுத்து வைக்கிற ஒவ்வொரு பாதையும் கரடு முரடாக இருந்தாலும் சரி, அதில் நான் வெற்றி கண்டே தீருவேன் என்று சபதம் போட்டு வெற்றி நடை போட்டு வருகிறார் விஜய் சேதுபதி. குறுகிய காலத்தில் எட்டாத தூரத்துக்கு உயர்ந்தவர், ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் பல சர்ச்சைகளில் மாட்டி சிக்கித் தவித்து இருக்கிறார். இருந்தாலும் அதையெல்லாம் கடந்து தற்போது தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.

விட்ட இடத்தை பிடிக்க போராடும் விஜய் சேதுபதி

அந்த வகையில் குரங்கு பொம்மை படத்தை எடுத்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்துள்ளார். இவருடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன், அபிராமி, முனீஷ்காந், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இன்று கிட்டத்தட்ட 1915 திரையரங்குகளுக்கும் மேல் ரிலீஸ் ஆகி உள்ளது.

பொதுவாக வெள்ளிக்கிழமை படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு ஒவ்வொருவரும் வரிசை போட்டு காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் குறைந்தது ஐந்து படமாவது ரிலீஸ் ஆகும். ஆனால் இன்று பெருசாக சொல்லும் படி எந்த படமும் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்துடன் போட்டி போட இறங்கவில்லை.

இதனால் ஒன் மேன் ஆர்மியாக அதிரடி காட்ட விஜய் சேதுபதி தயாராகி விட்டார். வழக்கம்போல் விஜய் சேதுபதி நடிப்புக்கு குறை சொல்ல முடியாத அளவிற்கு தத்ரூபமாகவும், வித்தியாசமான கதையுடன் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளை அமைக்கப்பட்டு செண்டிமெண்ட் ஆக்சன் என அனைத்தையும் பக்கவாக பொருத்தி வைக்கப்பட்ட படமாக தான் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது மகாராஜா படம்.

அதிலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார். எப்படியாவது வில்லன் இமேஜை தகர்த்து எறிந்து ஹீரோவாக சிம்ம சொப்பனம் போட்டு உட்கார வேண்டும் என்று மகாராஜா படத்தின் மூலம் மறு பிறவி எடுத்து வந்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இப்படம் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை போகப் போக தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இன்று வெளியான படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு ரெண்டு கோடி லாபத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை என்று மூன்று நாட்கள் இருப்பதால் விஜய் சேதுபதிக்கு மகாராஜா படம் வெற்றியை கொடுக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் இந்த வெற்றியை கெட்டியாக பிடித்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக விட்ட இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி மகாராஜா படத்திற்கு செய்த பிரமோஷன்

Trending News