வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரெண்டு கெட்டான் நிலைமையில் தள்ளாடும் விஜய் சேதுபதி.. ப்ளூ சட்டை கொடுத்த மகாராஜா பட விமர்சனம் எப்படி.?

Maharaja- Blue Sattai Review: ஒரு படம் திரையரங்குகளில் வருகிறது என்றால் நாம் எல்லாம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு எப்படி குதூகலமாக இருக்கிறோமோ அதைவிட ப்ளூ சட்டை மாறன் புது படத்திற்கு விமர்சனம் கொடுக்க முதல் ஆளாக வந்து விடுவார். அதுவும் இவர் கொடுக்கிற விமர்சனம் நிச்சயமாக நல்லவிதமாக இருக்காது. அந்தப் படத்தின் கதையையும், நடித்த ஆர்டிஸ்ட்களையும், எடுத்த இயக்குனர்களையும் வச்சு செய்யும் அளவிற்கு சம்பவத்தை செய்துவிட்டு போய்விடுவார்.

அதுவும் பெரிய பெரிய நடிகர்கள் படம் என்றால் இவருக்கு அல்வா சாப்பிட மாதிரி. அப்படி இருக்கும் பொழுது விஜய் சேதுபதி படத்தை மட்டும் சும்மா விடுவாரா என்ன. என்னதான் விமர்சனம் கொடுத்திருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். அதாவது குரங்கு பொம்மை படத்தை எடுத்த நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா படத்தை நடித்து முடித்து இருக்கிறார்.

மகாராஜா படத்திற்கு ப்ளூ சட்டை விமர்சனம்

இப்படம் நாளை அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. அதற்கு முன் ரிவ்யூ ஷோ பார்த்த பலரும் டுவிட்டரில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே மாதிரி ப்ளூ சட்டையும் அவருடைய விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார்.

அதாவது சாதாரண சலூன் கடையே வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு மனைவி இல்லை ஒரே ஒரு அன்பான மகள் மட்டும் இருக்கிறாள். ஆனால் அந்த மகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் ஸ்போர்ட்ஸில் கவனம் செலுத்துகிறார். அது சம்பந்தமாக அவர் கேம்புக்கு போயிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி திடீரென்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து குப்பைத் தொட்டியை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இதை கேட்டதும் அங்கு இருப்பவர்கள் நக்கல் அடித்து கிண்டல் பண்ணுகிறார்கள். உடனே விஜய் சேதுபதி என்னுடைய குப்பைத் தொட்டியை கண்டுபிடித்து கொடுத்தால் நான் அஞ்சு லட்ச ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

உடனே இந்த அஞ்சு லட்ச ரூபாய்க்காக அந்த குப்பை தொட்டியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசர்கள் தேட முயற்சி எடுக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு திருட்டு கும்பல் எங்கேயாவது ஒதுங்கி இருக்கும் தனி வீட்டில் சென்று நகை பணத்தை கொள்ளை அடித்து விட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு பல திருட்டு வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

இப்படி இரண்டு கதை வேறு ஒரு டிராக்கில் நகர்ந்து கொண்டு போகும் பொழுது இரண்டாம் பகுதியில் அனைத்துக்கும் சேர்ந்து ஒரு கதை ட்ராக் வருகிறது. அதை பார்க்கும் பொழுது முதல் பாதியில் உள்ளது இரண்டாம் கதையோடு ஒத்துப் போகிற மாதிரி அனைத்து முடிச்சுகளையும் போட்டு இணைத்து இருக்கிறார்கள்.

மேலும் இதில் வில்லனாக அனுராக் நடிப்பு பெருசாக எடுபடவில்லை. அதே மாதிரி நடராஜன் கெட்ட போலீஸ் என்பதை காட்டுவதற்கு ஒரு நீளமான ஸ்டோரியை சொல்லி போர் அடிக்க வைத்திருக்கிறார்கள். அத்துடன் முதல் பாதியை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இரண்டாம் பாதி நன்றாக அமைந்திருக்கிறது.

கதையும் விறுவிறுப்பாக நகர்ந்து டுவிஸ்ட்டாக பல திருப்பங்கள் நடைபெறுகிறது. முக்கியமாக சிங்கம்புலி எண்டரி கொடுத்த பின்பு அவரை வைத்து நகரும் ஒவ்வொரு காட்சிகளும் அட்டகாசமாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் முதல் பாதி சொதப்பினாலும் இரண்டாம் பாதி குறை சொல்ல முடியாத அளவிற்கு நன்றாக அமைந்திருக்கிறது என்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் மகாராஜா படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் இப்படம் விஜய் சேதுபதியின் கேரியரை தூக்கி நிறுத்துமா? விட்ட இடத்தை பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகிய நிலையில் தள்ளாடுகிறார்.

மகாராஜா படத்திற்கு பிரமோஷன் பண்ணிய விஜய் சேதுபதி

Trending News