செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

15 நாள் ஷூட்டிங்னு சொல்லிட்டு மாச கணக்குல போகுதே.. தப்பிக்க முடியாமல் திணறும் விஜய் சேதுபதி

Actor Vijay Sethupathi: ஹீரோ, வில்லன், வயதான மனிதன், திருநங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பேமஸ் ஆகி வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தப் படத்தின் சூட்டிங் 15 நாட்கள் மட்டுமே என விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்த வெற்றிமாறன், இப்போது மாத கணக்கில் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.

Also Read: விஜய் சேதுபதி போல், அக்கட தேசத்திற்கு தஞ்சம் புகுந்த நடிகர்.. 100 கோடி கலெக்ஷன் பார்த்த படம்

இவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் மக்கள் செல்வன் மண்டையைப் பிச்சுக்கும் நிலைமையில் இருக்கிறார். ஆனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிகமான ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் என வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியரையும் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனால்தான் விடுதலை படத்தின் ஷூட்டிங் 15 நாளில் இருந்து 50 நாட்களாக அதிகரித்து இருக்கிறது என்று வெற்றிமாறன் விஜய் சேதுபதியை சமாதானப்படுத்துகிறார்.

Also Read: சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி.. நண்பனுக்காக அரங்கேறிய சம்பவம்

ஏற்கனவே விருது வழங்கும் நிகழ்ச்சியின் மேடையில் மஞ்சு வாரியரை பார்த்து விஜய் சேதுபதி ‘உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று அசடு வழிந்தார். அவருடன் இப்போது சேர்ந்து நடிப்பது விஜய் சேதுபதிக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம்.

எனவே விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியாருக்கு வெற்றிமாறன் ஒரு ஜோடியை சேர்த்து விட்டிருக்கிறார். இருப்பினும் ஷூட்டிங் திட்டமிட்டபடி நடத்தப்படாமல் இஷ்டத்திற்கு மாதக்கணக்கில் இழுத்தடிப்பதால் விஜய் சேதுபதி மற்ற படங்களில் எப்படி நடிப்பது என தெரியாமல் திணறுகிறார்.

Also Read: கெஸ்ட் ரோலில் பல கோடிகள் சம்பளம் வாங்கிய 5 பேர்.. கரும்பு தின்ன கூலி வாங்கிய விஜய் சேதுபதி

Trending News