வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அருமையாய் சொல்லியும் ஏமாற்றிய ரசிகர்கள்.. அந்தப் பக்கமாவது ஜெயிப்பாரா விஜய் சேதுபதி

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் தான் கடைசி விவசாயி. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் உருவான படம்தான் கடைசி விவசாயி. இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியானது.படம் வெளியான நாளிலிருந்து பல்வேறு பிரபலங்கள் இந்த படம் குறித்து தங்களுடைய மேலான கருத்துக்களை நேர்மறையாக தெரிவித்து வருகின்றனர்.

இந்தப்படத்தில் ஒரு விவசாயி அடையும் துன்பங்களை மிகவும் யதார்த்தமாகவும், கதைக்குள் மிக ஆழமாகவும் சொல்லியிருப்பதால் படம் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. கடைசி விவசாயி படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நிஜத்தில் நாம் ஒரு கிராமத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை நமக்கு அளிப்பதற்காக ஒளிப்பதிவாளராகவும், மிகச்சிறந்த வேலையை இயக்குனர் மணிகண்டன் செய்திருக்கிறார்.

மேலும் இந்தப் படம் பல விருதுகளை அறுவடை செய்து வருகிறது. இந்த ஆண்டின் மிக முக்கியமான பல விருதுகளை இந்த கடைசி விவசாயி திரைப்படம் வாங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தியேட்டரில் வெளியாகி பெரும் பாராட்டுகளை குவித்த கடைசி விவசாயி திரைப்படம் தற்போது சோனி லைவ் OTT யில் மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதற்கான OTT வெளியிட்டு உரிமையை சோனி லைவ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த OTT ரிலீசுக்கான டிரைய்லரை நேற்று சோனி லைவ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தது.

ஒரு தரமான படம் தற்போது சோனி லைவ் OTT யில் வெளியாக இருக்கிறது. இனியும் பல விருதுகளையும் இந்தப் படம் குவிக்க இருப்பதால் நிச்சயம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படமாகவும் இந்தப் படம் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News