ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சீனாவில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. 3 நாளில் கோடிகளை வாரிசுருட்டிய மகாராஜா

Maharaja: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், மம்தா மோகன்தாஸ் என பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் மகாராஜா. கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 132 கோடி வரை வசூலித்தது.

இதற்கு முன்பாக சில தோல்விகளை சந்தித்த விஜய் சேதுபதிக்கும் இப்படம் மிகப்பெரும் வரவேற்பை கொடுத்தது. அதை தொடர்ந்து நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அங்கும் அதிகபட்ச பார்வையாளர்களை கவர்ந்த மகாராஜா நம்பர் ஒன் இடத்தை பிடித்து ட்ரெண்டானது.

இப்படி பாக்ஸ் ஆபிஸை கலக்கிய இப்படம் சில தினங்களுக்கு முன்பு அதாவது நவம்பர் 29 சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 40,000 ஸ்கிரீன்களில் இப்படம் திரையிடப்பட்டது.

சீனாவில் சக்கை போடு போடும் மகாராஜா

அங்கும் படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதே போல் தியேட்டர்களில் டிக்கெட் வாங்கும் போது அதன் கூடவே ஒரு சிறு குப்பைத்தொட்டியை பரிசாக கொடுத்து ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருக்கிறது பட குழு.

இது நல்ல பிரமோஷன் ஆக அமைந்த நிலையில் தற்போது படத்திற்கான வரவேற்பு இன்னும் அதிகரித்துள்ளது. அதன்படி படம் வெளியான மூன்று நாட்களிலேயே 26 கோடிகள் வரை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டாரின் 2.0 படம் வெளிநாட்டில் மிகப்பெரும் வசூலை ஈட்டியது. ஆனால் மகாராஜா அதை ஓவர் டேக் செய்து விட்டதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விஜய் சேதுபதி சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

Trending News