ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

3 வருடமா வியாபாரம் ஆகாத விஜய்சேதுபதியின் ஹிட் படம்.. தேசிய விருது இயக்குனருக்கே இந்த நிலைமையா.?

கடந்த காலங்களில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால், அதனை திரையரங்குகளில் காண முடியாத ரசிகர்கள் தொலைக்காட்சியில் காண்பதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும், தோல்வி படம் என்றால் விரைவிலேயே டிவிக்கு வந்துவிடும். ஆனால், இப்பொழுதுள்ள ஓடிடி காலத்தில், படம் வெற்றி பெற்றாலும் தோல்வி கண்டாலும் குறைந்தது ஒரு மாதம் தான். அதற்குள்ளாகவே ஓடிடி-யில் வெளிவந்து விடுகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் நடிப்பில் வெளிவந்த படம் ஆரண்ய காண்டம். தமிழில் வெளிவந்த முதல் neo-noir கதையமைப்பை கொண்ட திரைப்படம் இது. இதனை இயக்கியவர் தியாகராஜா குமாரராஜா, முதல் படத்திலேயே விமர்சன ரீதியாக வெற்றி கண்ட அவருக்கு அந்த படம் இயக்கியதற்கு சிறந்த முதல் படம் இயக்கிய இயக்குனர் என்ற தேசிய விருதும் கிடைத்தது.

மேலும், அந்த திரைப்படம் சிறந்த எடிட்டிங்கிற்கான தேசிய விருதும் பெற்றது. அந்த படம் வணிக ரீதியாக தோல்வி கண்டாலும் தற்போது அந்த படம் ஒரு cult classic’காக தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. வித்தியாசமான கதைக்களத்திலும், கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. தன்னுடைய சிறந்த நடிப்பால் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளமே கொண்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இவரும் தியாகராஜா குமாரராஜாவும் ஒரு படத்தில் இணையுள்ளதாக செய்திகள் வெளியான முதலே அந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு உண்டாகியது. சூப்பர் டீலக்ஸ் என பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தம் ஆகினர்.

மேலும், விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியானதால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உண்டாக்கின. 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

தற்போது வரை தொலைக்காட்சிகளில் வெளியிடப்படாத இந்த படம் வியாபாரம் ஆகவில்லை என்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது. ஏனென்றால் சென்சார் இல்லாமல் இந்த படம் வெளியிட முடியாது. அப்படி ஒரு சில காட்சிகளை கட் செய்தால் படம் பாதி நேரம் கூட காட்சிகள் வராது என்பதுதான் உண்மை. பா**யல் ரீதியான கதைக்களம் என்பதால் வியாபாரம் ஆகவில்லை போல.

விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் வாரிக் குவித்தது. முக்கியமாக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த இந்த திரைப்படம் Netflix ஓடிடி’யில் வெளியானது.

Trending News