திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சன்னி லியோன் புது பட போஸ்டரை வெளியிட விஜய்சேதுபதி.. கூர்மையான கத்தியுடன் மிரட்டல்

அடல்ட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் கனடா நாட்டில் பிறந்தவர். அடல்ட் படங்களில் தன்னுடைய இளம் பருவத்தில் நடித்து புகழ் பெற்றவர் இவர் தற்போது அதில் இருந்து விலகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஜெய்யுடன் தமிழில் வடகறி என்னும் படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடினார்.

இப்போது சன்னி லியோன் கதாநாயகியாக யுவன் இயக்கத்தில் ‘ஓஎம்ஜி’ (ஓ மை கோஸ்ட்) என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் சஞ்சனாவுடன் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ராணி போல் வேடமிட்டுள்ள சன்னி லியோன் அவரது கையில் ஒரு கத்தி போன்ற ஆயுதத்துடனும் கொடூரமாக நிற்கிறார். இப்படத்தில் குக் உடன் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, நகைச்சுவை நடிகர் சதீஷ், யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து ‘ஓஎம்ஜி’ தயாரித்துள்ளனர். இப்படம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று திகில்-நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட கிளியோபட்ரா காலத்தில் நடக்கும் கதைக்களமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

omg
omg

படத்தை பற்றி இயக்குனர் யுவன் கூறுகையில், “சன்னியின் கதாபாத்திரம் சில நேரங்களில் ஹீரோவாகவும் சில சமயங்களில் வில்லனாகவும் தோன்றும். இரண்டு உணர்ச்சிகளையும் உணர்ந்து அவர் மென்மையான நபராகவும், திமிர்த்தனமான பக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துயுள்ளார். தமிழில் சன்னி லியோனையே டப்பிங் பேசவைக்கவும் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Trending News