Rio: விஜய் டிவியின் மூலம் பெரிய திரைக்கு ஜம்ப் ஆகி இருக்கிறார் ரியோ. அவர் சில படங்கள் நடித்திருந்தாலும் கடந்த 2023ல் வெளிவந்த ஜோ நல்ல வரவேற்பை பெற்றது.
![rioraj](https://www.cinemapettai.com/wp-content/uploads/2025/02/rioraj.webp)
அந்த படத்திற்கு பிறகு தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதை விஜய் சேதுபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ நடிக்கும் படத்திற்கு ஆண்பாவம் பொல்லாதது என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காலத்திற்கு ஏற்ற தலைப்பாக இது இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
மேலும் போஸ்டர் வித்தியாசமாக இருப்பதை பார்க்கும்போது நிச்சயம் காமெடிக்கு கேரன்ட்டி என தெரிகிறது. சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் வெளிவந்தது.
அப்படமும் திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் சந்திக்கும் பிரச்சனையை மையப்படுத்தி இருந்தது. தற்போதைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருந்ததாலேயே அப்படம் அதிக கவனம் பெற்றது.
அந்த வரிசையில் ரியோவும் ஆண்பாவம் பொல்லாதது என நிரூபிக்க வருகிறார். இவருக்கு எந்த அளவுக்கு மக்களின் ஆதரவு இருக்கும் என்பதை பார்ப்போம்.