நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறு வேடங்களில் நடித்து வெறும் 250 ரூபாய் சம்பாதித்த விஜய் சேதுபதி, தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி படிப்படியாக முன்னேறியவர்.
இவருடைய விடாமுயற்சி தான் அடுத்தடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தது. கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என ஒரு சில ஹீரோக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என்று நடிப்புத் திறனை வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி.
இந்நிலையில் தன்னுடைய வெற்றியின் ரகசியம் என்ன என்பதை விஜய் சேதுபதி தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது ‘ஒரு படம் தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும் என் உழைப்பு மாறவே மாறாது’.
இதுதான் விஜய் சேதுபதி இதுவரை கையாளும் மந்திரம். இதனால்தான் அவர் இந்த இடத்தில் இருப்பதாக கூறிவருகிறார். 2011ஆம் ஆண்டு தொடர்ந்து 6 படங்களை கொடுத்து, அதன் பிறகு 2017ஆம் ஆண்டு 5 படங்களையும், 2018ஆம் ஆண்டு 7 படங்களையும் கொடுத்தார்.
அத்துடன் 2018ஆம் ஆண்டு இறுதியில் தனது 25வது படமான சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி 75 வயது முதியவராக நடித்து அசத்தியிருப்பார்.விஜய் சேதுபதி மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் ரசிகர்களை கூட கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் நபர்.
படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இன்னும் விஜய் சேதுபதி காண ரசிகர்கள் இருந்துதான் வருகின்றனர். எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவில் விஜய் சேதுபதி தற்போது போராடி வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது.