செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

யாரை கேட்டு உள்ள வந்த? தனது மகளை பார்த்து ஷாக் ஆன விஜய் சேதுபதி

பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சச்சனா போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே சில சீரியல்களில் நடித்து வந்தவர், கண்ணான கண்ணே சீரியலில் தான் அனைவருக்கும் பரிச்சையமாகி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் சச்சனா நடிக்கும் போது 9ம் வகுப்பு படித்து வந்தாராம்.

இவர் சினிமாவில் முதல்முதலாக தோன்றியது நடிகர் கௌதம் கார்த்திக்கின் 1947 என்ற திரைப்படத்தில் தான். ஆனால், இந்தப்படம் அதிகம் மக்களிடம் ரீச் ஆகவில்லை. இந்த நிலையில் இவருக்கு திருப்புமுனை கொடுத்த படமென்றால் அது மகாராஜா படம் தான்.

இவரது நடிப்பு அசாதாரணமாக இருக்கும். குறிப்பாக அப்பா மகள் உறவை அழகாக காத்திருப்பார்கள். படம் முடியும்போது, ரொம்ப டிஸ்டர்ப் ஆனது என்றே சொல்லலாம்.

மகளை பார்த்து ஷாக் ஆன விஜய் சேதுபதி

இந்த நிலையில் இந்த முறை போட்டியாளராக விஜய் சேதுபதி மகளே என்ட்ரி கொடுத்துள்ளார். ஆம், இந்த நிகழ்ச்சியில் சச்சனா போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார். தனது மகளை பார்த்தவுடன் அதிர்ந்து போனார் விஜய் சேதுபதி. ஒரு நிமிடம் தான் ஒரு தொகுப்பாளர் என்பதையே மறந்து, அப்பாவாக மாறிவிட்டார்.

நிகழ்ச்சியில் எண்டரி கொடுத்தவுடன், விஜய் சேதுபதியே “யாரை கேட்டு நீ இங்க வந்த? என்று தான் கேள்வி கேட்டார். உனக்கு என்ன அறிவுரை சொல்வது என்று எனக்கு தெரியவே இல்லை. ஆனா ஒரு விஷயம் மட்டும் உனக்கு நான் சொல்கிறேன். உனக்கு என்னை அப்பா என்று கூப்பிட வேண்டுமா? கூப்பிடலாம், அதே போல் சார் என்று கூப்பிட வேண்டுமா? கூப்பிடலாம்.

அதற்கு என்று ஒழுங்காக விளையாடாமல் விக் எண்டில் வந்து அப்பா என்று சொல்ல கூடாது” என்றார். அவர் இப்படி பேசியது மேடையில் சிரிப்பை ஏற்படுத்தியதோடு க்யூட்டாகவும் இருந்தது. இந்த நிலையில் மகளுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆக அட்வைஸ் எல்லாம் செய்து அனுப்பிக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News