செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விடுதலை பார்த்துவிட்டு சூரியை விமர்சித்த விஜய்சேதுபதி.. அந்த மாதிரி ட்ராக் இனி வேண்டாம்

விஜய் சேதுபதியும் வெற்றிமாறனும்  முதன் முதலாக இணையும் படம் விடுதலை. இந்த படத்தில் சூரி காவலாளியாக நடித்துள்ளார், காமெடி கேரக்டர் இல்லாமால் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக அவர் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். மேலும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

விடுதலை படம் ஜெயமோகனின் துணைவன் என்னும் சிறு கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சூரி காவலாளியாகவும், விஜய் சேதுபதி போராளியாகவும் நடிக்கின்றனர். இதன் முதல்கட்ட சூட்டிங் சத்தியமங்கலம் அடர்ந்த காட்டு பகுதியில் நடைபெற்றது.

Also Read : விஜய்சேதுபதி அஸ்திவாரம் போட்ட 5 படங்கள்.. இப்பவும் பீல்ட் அவுட் ஆகாததற்கு இதான் காரணம்

விஜய் சேதுபதியும், சூரியும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சினிமாவில் தங்கள் பயணத்தை தொடங்கியவர்கள். விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று என்றால், சூரிக்கு வெண்ணிலா கபடி குழு தான் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜய்சேதுபதி, சூரிக்கும்  தனக்கும் ஒரு நல்ல நட்பு இருப்பதாகவும், அவருடன் விடுதலை படத்தில் நடிப்பது சிறப்பாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார். சேதுபதி சூரியிடம் காமெடியுடன் நின்று விடாமல் நல்ல டைரக்டர்களை அணுகி குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் கூறியிருக்கிறார்.

Also Read : அல்லு அர்ஜுனை ஓரங்கட்டிவிட்டு, ஷாருக்கானுக்கு பச்சை கொடி காட்டிய விஜய் சேதுபதி

சூரி தன்னுடைய திரை பயணத்தை 1997 ல் ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமே சூரிக்கு கோலிவுட்டில் நல்ல வாய்ப்புகள் அமைய ஆரம்பித்தன. அந்த படத்திற்கு பிறகு அவர் ‘பரோட்டா’ சூரி என்றே அழைக்கப்பட்டார். அப்போது வளர்ந்து வந்த விமல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இவரே ஆஸ்தான காமெடி நடிகராக ஆகினார்.

அவருடைய கடின உழைப்பின் பலனாக வெற்றிமாறன் படத்தில் ஒரு முக்கியமான அதுவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விடுதலை முதல் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு பேசிய சூரி, இந்த விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அந்த படத்துக்கே ஒரு அடையாளம் கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

விடுதலை முதல் பாதி பார்த்த விஜய் சேதுபதி மிக அற்புதமாக சூரி நடித்துள்ளதாகவும் வியந்து பாராட்டியுள்ளார். காமெடியில் செல்லவேண்டாம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்பே வைத்துள்ளதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Also Read : சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி

Trending News