புதன்கிழமை, ஜனவரி 22, 2025

எதுக்கு இந்த மாதிரி கேள்வி கேக்குறீங்க.. விஜய் சேதுபதியை டென்ஷன் ஆக்கிய அந்த ஒரு கேள்வி

Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதி ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இன்று பாலிவுட் சினிமாவே அவருக்காக காத்திருக்கும் அளவுக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ஜவான் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து மிரட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்த மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் பட குழு தீவிரமாக இறங்கி இருக்கிறது. சமீபத்தில் மும்பையில் படத்தின் பிரமோஷன் விழாவில் விஜய் சேதுபதி சரளமாக இந்தியில் பேசியது எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. அதைப்பற்றி சொல்லுகையில் அவர் ஏற்கனவே துபாயில் வேலை பார்க்கும் பொழுது இந்தி கற்றுக் கொண்டதாகவும், அது தற்போது இந்தி படங்களில் நடிப்பதற்கு தனக்கு பெரிய உதவியாக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

Also Read:ஷாருக்கான் வாலை விடாமல் பிடித்துக் கொள்ளும் நடிகர்.. மூன்று மடங்கு சம்பளத்துக்கு அட்லீயை வைத்து விட்ட தூது

இந்த ரிலீசுக்கான பிரமோஷன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தற்போது படக்குழு சென்னை வந்திருக்கிறது. நேற்று நுங்கம்பாக்கத்தில் நடந்த பட விழாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வி விஜய் சேதுபதியை பயங்கர டென்ஷன் ஆக்கி இருக்கிறது. இது குறித்து அவர் சொன்ன பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டென்ஷன் ஆன விஜய் சேதுபதி

பத்திரிக்கையாளர் ஒருவர், விஜய் சேதுபதியை பார்த்து 75 ஆண்டு காலமாக நம்முடைய அரசியல் மற்றும் கலாச்சாரம் இந்தியை எதிர்க்கிறது. இன்று வரை இந்தி தெரியாது போடா என்று பிரச்சாரம் செய்து வருகிறோம். இந்தி படிக்க வேண்டுமா, வேண்டாமா என கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி இப்ப எதுக்கு இந்த கேள்வியை என்கிட்ட கேக்குறீங்க என திருப்பி கேள்வி கேட்டார்.

மேலும் பேசிய விஜய் சேதுபதி, இங்கே இந்தியை படிக்க வேண்டாம் என யாருமே சொல்லவில்லை, இன்னும் சொல்லப்போனால் இந்தியை படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியை திணிக்க வேண்டாம் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்தியை படிப்பதற்கும், திணிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது, அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என சொல்லி இருக்கிறார்.

விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். அவருக்கு இந்தி மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி காத்திருக்கிறது. அவரைப் போன்ற ஒரு திறமையான கலைஞனுக்கு மொழி என்பது எப்போதுமே தடையாக இருக்காது. அப்படிப்பட்ட நடிகருக்கு இது மாதிரியான கேள்வி கோபத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:யோகி பாபு இடத்தை பிடித்த விஜய்யின் செல்லபிள்ளை.. இவர் இல்லனா தளபதி நடிக்க மாட்டாராம்

Trending News