செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இது என்னடா விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை.. விக்ரம் வேதா படத்தில் நடித்த பிரபலம் வேதனை

இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியால் நெகட்டிவ் ரோல் நடிக்க முடியும் என்று நிரூபித்தார்.

இதனிடையே இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த புஷ்கர் மற்றும் காயத்ரி, அதில் ஹிந்தி நடிகர் சைப் அலி மாதவன் கதாபாத்திரத்திலும் ஹிர்த்திக் ரோஷன் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ட்ரெய்லர் வெளியாகி பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது இத்திரைப்படம் இந்தியாவில் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Also read: அடேங்கப்பா முகத்தை பார்த்து அஞ்சு மாசம் ஆச்சு.. வெளிவராமல் இருக்கும் விஜய் சேதுபதியின் 2 படங்கள்

இதனிடையே விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரம் யாராலும் நடிக்க முடியாது என்பதற்கு ஏற்றார் போல் ஹிர்த்திக் ரோஷனின் நடிப்பு அமைந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷன் சரியாக பொருந்தவில்லை என்றும் நெட்டிசன்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனிடையில் அண்மையில் ஹிர்த்திக் ரோஷன் விஜய் சேதுபதியின் நடிப்பைப் பற்றி கூறியுள்ளார்.

தமிழில் விக்ரம் வேதா வெளியான போது அதில் விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரம் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கும். என்னால் விஜய் சேதுபதி நடித்தது போலவே மீண்டும் நடிக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருந்ததாகவும், நான் அவரைப் போல் நடிப்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

Also read: பயங்கர பிஸியா இருக்கும் விஜய் சேதுபதி.. அடுத்து அடுத்து இருக்கும் படவாய்புகள்

மேலும் என்னால் முடிந்ததை ஹிந்தி விக்ரம் வேதா திரைப்படத்தில் நான் செய்திருக்கிறேன் என்றும் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவையும்,விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் ஹிர்த்திக் ரோஷன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: விஜய் சேதுபதியுடன் இணைய இருந்த கீர்த்தி சுரேஷ்.. ராமராஜனால் நடந்த டிவிஸ்ட்

மேலும் ஹிந்தி விக்ரம் வேதா திரைப்படத்தில் சைப் அலிகானின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் புஷ்கர் மற்றும் காயத்ரி முதன்முதலாக இயக்குனர்களாக களமிறங்கி தங்களது முதல் திரைப்படமே அங்கு ஹிட் அடித்துள்ளதை கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Trending News