தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதுவரை பார்த்து ரசித்த டான் திரைப் படங்களில் வித்தியாசமான கதைக்களம், அத்தோடு பலவித டிவிஸ்ட்டுகளையும் வைத்து படத்தை பார்க்கும் யாருக்கும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் திரைக்கதையை நகர்த்தி சென்றிருப்பார்கள் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி.
இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் கதையை அப்படியே இந்தியில் ரீ-மேக் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. அதன்பின்பு இந்தி ரீமேக்கில் வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்கிறார் என்றும் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அளித்தனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. மிக ஸ்டைலாக கருப்பு நிற உடையில் ஹிருத்திக் ரோஷன் மாஸாக நிற்கும் அந்த போஸ்டர் வெளியிடப்பட்டது.
ஆரம்பத்தில், ஷாருக்கான் ஒரு முக்கிய பாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க அணுகப்பட்டார், இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் காரணமாக படத்தின் தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டு, படம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திய இயக்குனர்கள் ஸ்கிரிப்ட்டில் மீண்டும் வேலை செய்து கதையை மேலும் மெருகேற்றினர்.
இந்த படத்தில் இந்தியின் முன்னணி கதாநாயகியாக ராதிகா ஆப்தே விக்ரமின் வக்கீல் மனைவியாக நடிக்கிறார். பல முக்கிய இந்திய நடிகர்களின் சங்கமமாக இந்த படம் இருக்கும். அதன்பிறகு இதைத்தொடர்ந்து, விக்ரமாக நடிக்கும் சைஃப் அலி கான் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது. இது இரண்டையும் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் மாஸான ஒரு திரைப்படம் வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தனித்தனியாக இவர்கள் இருவரையும் பார்ப்பதற்கே ரசிகர்கள் திரையரங்குகளை தெறிக்க விடுவார்கள். அப்படி இருக்கையில் இந்த மஜாவான இரண்டு நடிகர்களும் ஒரே திரையில் தோன்ற போகிறார்கள் என்று நினைக்கும் போது உண்மையில் இந்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த படத்தில் நீரஜ் பாண்டே திரைக்கதை எழுதி இருக்கிறார். இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கி வருகின்றனர்.
இந்த படத்தை சசிகாந்த் சக்கரவர்த்தி, ராமச்சந்திரா, பூஷன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் நிச்சயமாக தமிழில் வெளியான விக்ரம் வேதா போல, இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது