புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சாச்சனாவுக்கு நியாயம் கிடைக்குமா.? வார இறுதிக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதி

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மகாராஜா புகழ் சாச்சனா 24 மணி நேரத்திற்குள்ளாகவே எலிமினேஷன் செய்யப்பட்டார். இது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்ததோடு விமர்சனத்திற்கும் ஆளானது.

அது எப்படி எங்கள் ஓட்டு இல்லாமல் இப்படி ஒரு முடிவை எடுக்கலாம். இது நியாயமே கிடையாது. விஜய் சேதுபதி இதற்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் என இப்போது வரை ஆடியன்ஸ் கொந்தளித்து வருகின்றனர்.

ஆனால் இது பிக்பாஸ் டீமின் ஒரு விளையாட்டு யுக்தி தான் என கூறப்பட்டது. அது மட்டும் இன்றி மகாராஜா படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இப்படி ஒரு காரணம் சொல்லி வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

பெண்கள் அணி ரியாக்ஷன் என்ன?

எது எப்படியோ சாச்சனா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதன்படி இந்த வார இறுதியில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வாரம் விஜய் சேதுபதி கையில் எடுக்கும் முக்கிய பிரச்சினையாகவும் இது இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் சாச்சனா மீண்டும் வீட்டுக்குள் வந்தால் அவருக்கான ஆதரவு முன்பை விட கூடுதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் வீட்டுக்குள் இருப்பவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்? பெண்கள் அணி ரியாக்ஷன் என்ன? என்பது விரைவில் தெரிந்து விடும். எது எப்படியோ விஜய் டிவியின் டிஆர்பி இதை வைத்தே உயர்ந்துவிடும்.

Trending News