புதன்கிழமை, ஜனவரி 15, 2025

CWC5-ல் தேவையில்லாமல் சொறிஞ்சு விட்ட இர்ஃபான், திட்டிய விஜய் சேதுபதி.. என்ன நடந்துச்சு தெரியுமா?

CWC 5: குக் வித் கோமாளி சீசன் 5 கடந்த வார நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விருந்தினராக கலந்து கொண்டார். மகாராஜா பட பிரமோஷனுக்காக அந்த ஒட்டுமொத்த பட குழுவும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

உண்மையை சொல்ல போனால் அந்த படத்திற்கு அப்படி ஒரு பிரமோஷன் தேவை இல்லை தான். மகாராஜா பட குழுவினர் வந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை ப்ரொமோட் செய்து விட்டு போயிருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

விஜய் சேதுபதி வந்த நிகழ்ச்சி பெரிய அளவில் மக்களை கவர்ந்தது. இதில் கவனிக்கப்படாத விஷயம் ஒன்று கடந்த சில நாட்களாக வைரல் ஆகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர் இர்ஃபானை விஜய் சேதுபதி நோஸ்கட் செய்த விஷயம் தான் அது.

CWC5-ல் தேவையில்லாமல் சொறிஞ்சு விட்ட இர்ஃபான்

இந்த சீசனில் டிடிஎஃப் வாசனின் காதலி சோயா கலந்து கொண்டிருக்கிறார். இவர் உண்மையிலேயே வெகுளித்தனமாக இருக்கிறாரா, அல்லது நடிக்கிறாரா என்பது எல்லோருக்கும் சந்தேகம் தான். இவர் வெகுளித்தனமாக நடந்து கொள்வதால் எல்லோருமே இவரை ஒரு ட்ரோல் மெட்டீரியலாக பயன்படுத்தி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் சோயாவிடம் நீங்கள் டைரக்டர் என்று கேள்விப்பட்டேன் என்று சொல்கிறார். அதற்கு சோயா ஆம் என்று சொல்லி சில ஷார்ட் பிலிம் களை காட்டுகிறார். அப்போது இடையில் புகுந்த இர்பான் இவள பாத்தா, இதெல்லாம் பண்ற மாதிரியா இருக்குது என்ற ஒரு கமெண்ட்டை கொடுக்கிறார்.

அதற்கு விஜய் சேதுபதி திறமைக்கு தனியான முகம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன என்று மூன்றில் அடித்தால் போல் பதில் சொல்லி விடுகிறார். அது மட்டும் இல்லாமல் ஜோயாவிடம் நிறைய திறமை இருக்கிறது ஆனால் அவர் அதை எல்லாம் வெளிக்காட்டாமல் நீங்கள் கலாய்ப்பதற்கு ஸ்பேஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

அவரை ஏன் எல்லோரும் லூசு என்று சொல்கிறீர்கள். அவர் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தால் அவருக்கான ஸ்பேஸ் இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் என்று ஏகத்துக்கும் பிடிஎப் வாசனின் காதலியை புகழ்ந்திருக்கிறார்.

Trending News