திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் பரிதாப நிலைமை

அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக இருந்தது. ஆனால் இவர் மெத்தனமாக இருந்ததால் இந்த வாய்ப்பு இவரிடம் இருந்து கைநழுவி போய்விட்டது. இதனால் பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாகினார். பொதுவாகவே அஜித் ஒருவரை நிராகரித்தால் அவர் சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமலே போய்விடுவார். அந்த மாதிரி இவரும் ஆகக்கூடாது என்று பெரிய பதட்டத்துடன் இருக்கிறார்.

இவர் கல்யாணத்திற்கு பிறகு இவருக்கு ஏறுமுகம் தான் ஏற்படும் என்று பார்த்தால் இவருக்கு வரிசையாக சரிவு தான் ஏற்பட்டு வருகிறது. இதிலிருந்து மீண்டு ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கிறார்.

Also read: கடைசி வரை நயன்தாராவை வைத்து விளையாட்டு காட்டிய விக்னேஷ் சிவன்.. உச்சக்கட்ட பிபி-யில் விரட்டிய அஜித்

அதனால் அடுத்த வாய்ப்புகள் மூலம் நல்ல இயக்குனர் என்று இமேஜ் வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து நிதானமாக செய்து வருகிறார். அதற்காக இவர் கையில் ஆயுதமாக இருக்கும் வெற்றி நாயகி நயன்தாராவை வைத்து ஹீரோயின் சப்ஜெக்டாக ஒரு படத்தை இயக்கினால் கண்டிப்பாக அது வெற்றி அடையும் என்று நம்பிக்கையில் ஒரு படத்தை உருவாக்கப் போகிறார்.

இதனைத் தொடர்ந்து இவரின் அடுத்த படத்திற்கு யாரும் நடிக்க முன் வராததால் அதற்கும் ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார். அதாவது நயன்தார மற்றும் விஜய் சேதுபதி வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை கொடுத்து விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதனால் அவரிடம் வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக அவர் மறுக்க மாட்டார் என்று நினைத்திருக்கிறார்.

Also read: மோசமான ஆட்டிட்யூடால் பல வாய்ப்புகளை இழந்த விக்னேஷ் சிவன்.. பதறி ஓடிய முதலாளி

அதனால் தற்பொழுது விஜய் சேதுபதியிடம் அடுத்த வாய்ப்பிற்கான சம்மதத்தை வாங்கி அவரை லாக் செய்துள்ளார். மேலும் இவரை வித்தியாசமான கோணத்தில் படத்தில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதியிடம் ஆக்சன் கதையை சொல்லி இருக்கிறார். இந்த கதையை கேட்ட அவரும் உடனே ஓகே சொல்லி விட்டாராம்.

இப்பொழுது எப்படியாவது ஒரு படத்தை எடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விக்னேஷ் சிவன் இருப்பதால் இந்த மாதிரியான இரண்டு முடிவுகளை எடுத்திருக்கிறார். இந்த வாய்ப்புகளும் இவருக்கு சரியாக அமையவில்லை என்றால் இவர் தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்படும் இயக்குனராக ஆகி விடுவார்.

Also read: விக்னேஷ் சிவன் போல் மகிழ்திருமேனிக்கும் வரும் ஆப்பு.. ரீ என்ட்ரி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் லைக்கா

Trending News