வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தொப்பையும், தொந்தியுடன் வந்த டிஎஸ்பி.. கேலி, கிண்டலால் ஸ்லிமான விஜய் சேதுபதியின் செல்பி புகைப்படம்

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி படு ஸ்லிம்மாக இருந்தார். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் இருந்தற்கும் இப்போது உள்ளதற்கும் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஓவராக விஜய் சேதுபதி வெயிட் போட்டுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி டிஎஸ்பி படத்தில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்தில் போலீஸ் கெட்டப்க்கு பக்காவாக பொருந்திய விஜய் சேதுபதி டிஎஸ்பி படத்தில் தொப்பையும், தொங்கியுடன் வந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் விஜய் சேதுபதியை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஒரு ஹீரோவுக்கு உண்டான தகுதியையே விஜய் சேதுபதி இழந்து விட்டார் என்றும் கூறி வந்தனர்.

Also Read : ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

ஏனென்றால் ஒரு ஹீரோ தனது உடம்பை எப்போதுமே உடற்பயிற்சி மூலம் இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை தற்போது வரை விஜய் பின்பற்றி வருகிறார். ஆனால் விஜய் சேதுபதி சரசரவென உடல் எடையை ஏற்றியது அவரது கேரியருக்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

அதுமட்டுமின்றி ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கும் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தனது உடல் எடையை அதிகபடியாக குறைத்துள்ளார். இப்போது ஒரு மொபைல் போனில் செல்பி எடுப்பது போல ஒரு புகைப்படத்தை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Also Read : டிஎஸ்பி-யை விட வசூலில் மண்ணைக் கவ்விய கட்டா குஸ்தி.. எம்மாடி என பெருமூச்சு விட்ட விஜய் சேதுபதி.!

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்கள். அதாவது எப்படி விஜய் சேதுபதி மிகக் குறுகிய காலத்திலேயே உடல் எடையை சரசரவென குறைத்துள்ளார் என்ற யோசனையில் உள்ளார்கள். மேலும் விஜய் சேதுபதியின் இந்த நியூ லுக் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த கெட்டப் விஜய் சேதுபதியின் புதிய படத்திற்கான தோற்றம் என கூறப்படுகிறது. மேலும் இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலம் விஜய் சேதுபதிக்கு இனி எல்லாமே வெற்றி தான் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதன் மூலம் விஜய் சேதுபதி சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

vijay-sethupathi

Also Read : அடுத்தடுத்து தயாரிப்பாளர்களை காலி செய்த விஜய் சேதுபதி.. உதவி செய்ய வந்து உபத்திரவமான கதை

Trending News