புதன்கிழமை, ஜனவரி 15, 2025

செகண்ட் கிரேட் இயக்குனருக்கு வாண்டட் ஆக படம் கொடுத்த விஜய் சேதுபதி.. வெறுக்கும் படத்தோடு கோலிவுட்டை விட்டு ஓடிய டைரக்டர்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் மாஸ் காட்டி வருகிறார். ஆரம்பத்தில் சகட்டுமேனிக்கு படங்களை நடித்து தள்ளிய விஜய் சேதுபதி இப்போது நின்று, நிதானமாக கதை தேர்வு செய்து படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அதன் முதல் வெற்றி தான் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு. ஆனால் இந்த சமயத்தில் வாண்டட் ஆக செகண்ட் கிரேட் இயக்குனருக்கு விஜய் சேதுபதி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சூர்யாவுக்கு அட்ட பிளாப் படம் கொடுத்த இயக்குனருடன் விஜய் சேதுபதி கூட்டணி போட இருக்கிறார்.

அதாவது நாகர்ஜுனாவை கதாநாயகனாக வைத்து சிவா என்ற படத்தை தெலுங்கில் இயக்கியவர் தான் ராம் கோபால் வர்மா. இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தமிழில் உதயம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

விஜய் சேதுபதி எடுத்த விபரீத முடிவு

இந்நிலையில் தமிழில் இவர் கடைசியாக சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தை எடுத்திருந்தார். இந்த படம் சூர்யாவின் கேரியரில் மிகவும் மோசமான படமாக அமைந்தது. அதோடு வர்மா அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை பேசி பரபரப்பையும் ஏற்படுத்தக்கூடியவர்.

இப்போது விஜய் சேதுபதிக்கு ராம் கோபால் வர்மா கதை ஒன்று சொல்லி உள்ளார். அது விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்த போய்விட்டதாம். உடனடியாக அந்த படத்தில் நடிக்க கால்சூட் கொடுத்து விட்டாராம். ராம் கோபால் வர்மா அதிகமாக அடல்ட் மூவி எடுக்கக் கூடியவர்.

விஜய் சேதுபதி விட்ட மார்க்கெட்டை மகாராஜா படத்தின் மூலம் பிடித்த நிலையில் இப்போது ஏன் இந்த விபரீத முடிவு என பலரும் கூறி வருகிறார்கள். ஆனாலும் விஜய் சேதுபதி விடாப்பிடியாக இருப்பதால் கதை அவரை பெரிய அளவில் கவர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மகாராஜாவால் விஜய் சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்

Trending News