புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சர்ச்சைக்கு சரியான பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி.. வேப்பிலை அடிச்சு தூக்கி போட்ட மக்கள் செல்வன்

Vijay Sethupathi Response to controversy: பொதுவாக விஜய் சேதுபதியின் பேச்சு ரொம்பவே எதார்த்தமாகவும், மனசில் தோன்றிய விஷயத்தை அந்த உடனையே செய்யக்கூடிய ஒரு பிரபலமாகவும் தான் அனைவருக்கும் தெரியும். அதுவே இவருடைய பிளஸ் பாயிண்ட் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

தற்போது இவருடைய நடிப்பில் மேரி கிறிஸ்மஸ் படம் இன்று வெளியாகிறது. இதில் இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்திலும் படமாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இதில் ராதிகா சரத்குமார், காயத்ரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்ரீ ராம் ராகவன் இயக்கி இருக்கிறார்.

அதனால் இப்படத்தின் பிரமோஷன் சம்பந்தமாக விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் மற்றும் இயக்குனர் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து விளம்பரப்படுத்தினார்கள். அப்பொழுது படத்தை பற்றி விவரிக்கும் பொழுது பத்திரிகையாளர் கேட்ட சர்ச்சையான கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்து அனைவரையும் வாயை மூட வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

Also read: பாலிவுட்டால் விஜய் சேதுபதி இடம் ஏற்பட்ட மாற்றம்.. எல்லாம் கத்ரீனா கைஃப் வந்த நேரம் தான்

அதாவது தற்போது அரசியல்வாதிகள் ஹிந்தி தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று புறக்கணித்து வருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர் விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி முதலில் இந்த கேள்வி எங்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா. இதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம். நடிகர்களை பார்த்தாலே உங்களுக்கு ஏதாவது குதர்க்கமான கேள்வி கேட்க வேண்டுமா.

இப்படித்தான் சமீபத்தில் வந்த அமீர்கான் சாரிடமும் இதே கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இதில் ஏதாவது பிரச்சனை என்றால் நடிகர்களிடம் ஏன் இந்த கேள்வியை வைக்க வேண்டும் என்று கூறி ஒரு சரியான பதிலையும் கொடுத்திருக்கிறார். அதாவது ஹிந்தி படிப்பது தவறு இல்லை, யாரையும் படிக்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

தயவு செய்து ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்லுகிறார்கள் இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்று விஜய் சேதுபதி அந்த பத்திரிக்கையாளர்களை சரமாரியாக பதிலடி கொடுத்து இனி இந்த கேள்வியை கேட்காதபடி வாயை மூட வைத்து விட்டார். ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காய வேண்டும் என்று நினைக்கும் பத்திரிகையாளர்களுக்கு சரியான வேப்பிலை அடித்தது போல் விஜய் சேதுபதியின் பதில் இருந்தது என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Also read: விஜயகாந்த் மரணத்தில் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை.. கண்டுக்காத நன்றி கெட்ட நடிகர் சங்கம்

Trending News