புதன்கிழமை, ஜனவரி 29, 2025

அரசியல் சதியால் மறுக்கப்பட்ட ஆஸ்கர்.. தில்லாக சொன்ன விஜய் சேதுபதி, அரண்டு போன பாலிவுட்

Vijay Sethupathy: விஜய் சேதுபதி ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த ஜவான் பெரிய அளவில் கவனம் பெற்றது. அதிலும் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் பாலிவுட் ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் கேத்ரினா கைஃப்புடன் இணைந்து நடித்துள்ள மேரி கிறிஸ்மஸ் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதை பிரமோஷன் செய்யும் விதமாக பட குழுவினர் தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருக்கின்றனர்.

அதில் விஜய் சேதுபதியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது சூப்பர் டீலக்ஸ் படம் ஆஸ்கருக்கு செல்லாதது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இப்படம் ஆஸ்கருக்கு செல்லாதது மிகுந்த ஏமாற்றம்தான். நான் அந்த படத்தில் நடித்ததுக்காக சொல்லவில்லை.

Also read: கத்ரீனா கைஃப் உடன் லிப்லாக், அமங்களப்படுத்தும் விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் மேரி கிறிஸ்மஸ் ட்ரெய்லர்

நடிக்காமல் இருந்திருந்தாலும் கூட அப்படம் ஆஸ்கருக்கு செல்ல வேண்டும் என்றுதான் சொல்லி இருப்பேன். ஆனால் அப்போது ரன்வீர் சிங் நடித்த கில்லி பாய் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டது. அப்போது என் இதயமே நொறுங்கி விட்டது. இதில் நிச்சயம் அரசியல் சதி இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை.

அது தேவையில்லாததும் கூட என கூறியிருந்தார். இதுதான் இப்போது பாலிவுட் திரை உலகை மிரள வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு விஜய் சேதுபதி ஹிந்தி படத்தில் நடிக்கிறோம். அதனால் பட்டும் படாமல் பேசுவோம் என்று இல்லாமல் தில்லாக மனதில் பட்டதை பேசி இருக்கிறார்.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். இதற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் அப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Also read: எதுக்கு இந்த மாதிரி கேள்வி கேக்குறீங்க.. விஜய் சேதுபதியை டென்ஷன் ஆக்கிய அந்த ஒரு கேள்வி

Trending News