வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி, அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி.. பெரிய சம்பவத்துக்கு அடிபோடும் மக்கள் செல்வன்

ஸ்டைலிஷ் ஹீரோவாக இருந்து காலங்கள் கடந்தாலும் இன்றைய நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார். 1980 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தரராஜன் ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த பில்லா சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த் பில்லா, ராஜப்பாவாக படத்தில் மாஸ் காட்டி இருப்பார்.

இதில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பில்லா திரைப்படத்தில் எல்லா நடிகர்களுக்கும் நடிக்க வேண்டும் என்ற கனவு கண்டிப்பாக இருக்கும் ஆனால் அதனை அவ்வளவு எளிதாக யாரும் வெளியில் சொல்லி விட மாட்டார்கள். ரஜினிகாந்தின் பில்லா திரைப்படத்தை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு அஜித் இரட்டை வேடத்தில் நடித்து மீண்டும் அதே பெயரில் இப்படம் வெளிவந்தது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதில் அஜித் குமாருடன், நமீதா, நயன்தாரா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Also Read: விடுதலை முடித்த கையோடு விஜய் சேதுபதியின் செயல்.. மீண்டும் சரியா போகும் மார்க்கெட்

ஆனால் சூப்பர் ஸ்டாரின் பில்லா படத்தில் அவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக உள்ளது என்றும் அதிலும் அவர் ஸ்டைல் ஆக கோட்டு ஷர்ட் போட்டுக் கொண்டு ஸ்டைலாக நடந்து வருவது எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் விஜய் சேதுபதி. இப்படம் முதலில் ஹிந்தியில் தான் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் அவை ஹிந்தி பில்லாவாக இருந்தாலும் சரி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பில்லாவாக இருந்தாலும் சரி என்றும் எனக்கு எதுனாலும் ஓகே என ஆனா நான் அது மாதிரியான ஸ்டைலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக மற்ற ஹீரோக்கள் சொல்லத் தயங்கும் விஷயத்தை பட்டென்று சொல்லிவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்க விருப்பம் இருப்பதாக வெளிப்படையாக கூறியிருப்பது அவரின் பெருந்தன்மையை காட்டுவதாக தோன்றுகிறது.

Also Read: அடி மேல் அடிவாங்கும் விஷால், விஜய் சேதுபதி.. கழட்டி விட தயாரான தயாரிப்பாளர்கள்

ஆனால் இதுவே மற்ற ஹீரோக்கள் நடித்த படத்தை இப்படி எந்த நடிகர்களும் அவ்வளவு சீக்கிரமாக வெளியில் சொல்லி விட மாட்டார்கள். தல அஜித்திற்கு ஹிட் அடித்தது போல் தனக்கும் வெற்றி படமாக அமையும் என்று நினைத்து இவ்வாறு அவர் வெளிப்படையாக கூறி இருப்பது, தான் இழந்து கொண்டு வரும் சினிமா கேரியரை மீட்டு எடுப்பதற்காகவே கூட இருக்கலாம்.

இவ்வாறு பில்லா படத்தில் ரஜினி அஜித்தின் வரிசையில் இவர்கள் நடித்த அதை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் கண்டிப்பாக மக்கள் செல்வனுக்கு ரசிகர்கள் மத்தியில் சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் இந்த கனவானது நிறைவேறினால் கண்டிப்பாக இவை சென்சாரில் பேட்டையில் பெரும் சம்பவமாகவே இருக்கக்கூடும்.

Also Read: விஜய் சேதுபதியை ஓரங்கட்டும் தயாரிப்பாளர்கள்.. அடுத்தடுத்த தோல்விகளால் ஆட்டம் கண்ட மார்க்கெட்

Trending News