ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜவான் பட போஸ்டர்.. ஷாருக்கானுக்கு வில்லனா சும்மாவா

Jawan Movie: நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் மேற்கொள்ளும் அனைத்து கதாபாத்திரங்களிலும், தன் நடிப்பை சிறப்புற வெளிகாட்டி வருகிறார் விஜய் சேதுபதி. சமீபகாலமாய் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வரும் இவரின் ஜவான் படபோஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆக்சன் திரில்லர் படம் தான் ஜவான். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் பிரம்மாண்டத்தின் படைப்பாய் அட்லீ இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Also Read: இந்த கிளம்பிட்டாங்கல்ல கோர்ட்டு கேஸ்னு.. சூப்பர் ஸ்டாரை பத்தி பாட்டு பாடுனது குத்தமாயா.?

மேலும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய மேற்கொள்ளும் கதையாய் அமையப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ஷாருக்கான் இரு வேடத்தில் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருக்கிறார். மேலும் இப்படத்தின் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருக்கிறார்.

இவரின் நடிப்பை கண்டு உண்மையில் எனக்கு டஃப் ஆக இருந்ததாகவும் ஷாருக்கான் தன் வாய்பட கூறியும் இருக்கிறார். அந்த அளவிற்கு தன் நடிப்பினை பாலிவுட்டிலும் செதுக்கி வருகிறார் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று, தன் தரமான சம்பவத்தை செய்திருப்பார்.

Also Read: எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகை மீது கை வைக்காத ஒரே இயக்குனர்.. சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த சந்தானம்

அதேபோல் இப்படத்திலும் ஹீரோவிற்கு நிகராய் களம் இறங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படம் ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆயினும் போஸ்டர் வேலைகள் காரணமாக தாமதமாகி, வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி திரையில் வெளியாக உள்ளது.

வைரலாகும் விஜய் சேதுபதியின் ஜவான் பட போஸ்டர்

vijay-sethupati-jawan-poster
vijay-sethupati-jawan-poster

இதைத்தொடர்ந்து ரெட் சில்லி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் கௌரி கான் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தெறிக்கவிடும் கெட்டப்பில் வெளிவந்த இப்போஸ்டரில் தி டீலர் ஆஃப் டெத் என்னும் வார்த்தைக்கு ஏற்ப படத்தில் இவரின் பிரதிபலிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பிளேபாய் நடிகரின் லிஸ்டில் இருந்த பவ்யமான நடிகை.. உருக உருக காதலித்து திருமணம் வரை சென்ற ரகசியம்

Trending News