திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

கோடு போட்டா ரோடு போடும் குட்டி புலி! சூர்யாவை அடக்கி வாசிக்க சொன்ன விஜய் சேதுபதி

Vijay Sethupathi’s son Suriya will make his debut in Anal Arasu’s movie phoenix: நடிப்பின் மீது தனக்கு இருக்கும் தாகத்தால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்டாக செய்து முடிப்பவர் விஜய் சேதுபதி. கோலிவுட் பாலிவுட் என அனைத்திலும் நடிகனாகவும் வில்லனாகவும்  முத்திரை பதித்த விஜய் சேதுபதிக்கு மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்கள் நல்ல பேரை வாங்கித் தந்தன.

விடுதலை 2  படத்திற்கு பின் நல்ல தரமான கதை அம்சத்துடன் கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். வெற்றிமாறனின் விடுதலை 2 ல் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக சில சீன்களில் தோன்றியுள்ள விஜய் சேதுபதியின் மகன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக  நானும் ரவுடிதான், சிந்துபாத்,  ஜூங்கா போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் விஜய் சேதுபதியின் மகன், சினிமாவிற்கென்றே பிரத்யேகமாக நடன பயிற்சி மற்றும் சண்டை பற்றி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறாராம். மேலும் இவர் கடந்தாண்டு கூடைப்பந்து (Basketball) விளையாட்டை மையமாகக் கொண்ட ஹாட்ஸ்டாரில் உருவாகி வரும் நடு சென்டர் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

Also  read: மனைவி, பிள்ளைகளுடன் க்யூட் போஸ் கொடுத்த விஜய் சேதுபதி.. வைரலாகும் க்ளாசிக் ஸ்டைல் புகைப்படம்

இதனை தொடர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஆக்சன் மற்றும் விளையாட்டை மையப்படுத்திய ஃபீனிக்ஸ் வீழான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. சமீபத்தில் இப்படத்திற்கான பூஜையில் பங்கேற்ற சூர்யா, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு  தந்தைக்கு மிஞ்சிய தனயனாக துணிச்சலாகவும் நேர்மையாகவும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினார்.

தந்தையின் அடையாளத்தோடு தன்னை முன்னிறுத்த விரும்பாத சூர்யா, “அப்பா வேறு!நான் வேறு” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் படத்திலும் சூர்யா சேதுபதி என்று இல்லாமல் சூர்யா என்ற அறிமுகத்தோடே களமிறங்க உள்ளாராம்.

படபூஜையின் போது சிங்கப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி வீடியோகால் மூலமாக வாழ்த்து தெரிவித்ததாக கூறினார் சூர்யா. விஜய் சேதுபதி சீனியர் என்கின்ற முறையில் தன் மகன் சூர்யாவிடம் படங்களில் அளவுக்கு அதிகமாக அவரை முன்னிறுத்த வேண்டாம் எனவும் அடக்கி வாசிக்கும் படியாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

கதை பிடித்ததால் மட்டுமே நடிக்க ஓகே சொன்ன விஜய் சேதுபதி கல்லூரி படிப்பை பாதிக்காதவாறு விடுமுறை நாட்களில் படப்பிடிப்பில் கலந்து  கொள்ளுமாறும் அறிவுரை கூறியுள்ளார்.

Also read: நீ எல்லாம் ஜெயிக்கணும் டா என வாய்ப்பு கொடுத்த விஜய் சேதுபதி.. மோட்டார் மோகனுக்கு அடித்த ஜாக்பாட்

Trending News