திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதி பையனை வைத்து வெற்றிமாறன் போடும் திட்டம்.. திருப்தி அடையாத முதல் பாகம்

சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் விடுதலை படத்தின் சக்ஸஸ் ஆல் பெரும் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார் சூரி. இந்நிலையில் ஆயுத பூஜை அன்று லியோ படத்துடன் விடுதலை இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

முதல் பாகத்தில் முழுமையாக திருப்தி அடையாத வெற்றிமாறன் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகனை வைத்து பெரிய பிளான் போட்டு இருக்கிறார். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இன்னும் 20 நாட்கள் சூட்டிங் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன்.

Also Read: விடுதலை படத்திற்கு பிறகு சூரிக்கு இவ்வளவு துணிச்சலா.. அடுத்த பட அப்டேட்டை கொடுத்த குமரேசன்

ஏற்கனவே மே ஒன்றாம் தேதியில் இருந்து சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படியும் படம் ரெண்டு மாசம் இழுத்து அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் வரை வெற்றிமாறன் திருப்தி அடையவில்லை .

இந்த 20 நாளில் திருப்தி அடைவாரா என்பதுதான் அனைவரின் கேள்வி. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடுதலை 2 படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுடன் சூர்யா இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

Also Read: பட்ட பின் புத்தி தெளிந்த ஜி.வி… அண்ணன் காலியான திண்ண நமக்கு தான் என போடும் பிளான்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

நிச்சயம் இந்த படத்தில் சூர்யாவிற்கு வெயிட்டான ரோல் கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் இருக்கிறார் என்பது தெரிந்ததும் விடுதலை 2 படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாக உள்ளது.

Also Read: பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 5 இயக்குனர்கள்.. லோகேஷை மிஞ்சிய விஜய்யின் செல்ல தம்பி

Trending News