வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மகாராஜாவிற்கு பிறகு விஜய் சேதுபதி லெவலே வேற.. கைவசம் இருக்கும் அட்டகாசமான 5 படங்கள்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி ராசியில் இந்த வருடம் சுக்கிர திசை என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய ஐம்பதாவது படம் மகாராஜா பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தால் பெரிய ஹீரோக்களின் 50வது படம் 100 கோடி வசூல் எடுத்த லிஸ்டில் தற்போது மக்கள் செல்வன் இணைந்து இருக்கிறார். மகாராஜாவுக்கு பிறகு விஜய் சேதுபதி கைவசம் இருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.

விடுதலை 2: வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்த விடுதலை முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம் இந்த வருடத்தின் இறுதிக்குள் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை படம் ஜெயமோகனின் துணைவன் என்னும் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார்.

காந்தி டாக்ஸ்: விஜய் சேதுபதி நடிக்கும் பிளாக் காமெடி திரைப்படம் தான் காந்தி டாக்ஸ். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங்கன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிதி ராவ், அரவிந்த்சாமி நடித்திருக்கிறார்கள். காந்தி டாக்ஸ் திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெயின்: பிசாசு 2 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் ட்ரெயின் படத்தின் மூலம் இயக்குனர் மிஸ்கின் இணைந்திருக்கிறார். படம் அதிகாரப்பூர்வமாக உறுதியாக இருந்தாலும் அதை பற்றிய மற்ற தகவல்கள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை.

இடம் பொருள் ஏவல்: விஜய் சேதுபதி சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்றி இருக்கும் படம் தான் இடம் பொருள் ஏவல். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நவம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஸ்: இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் தான் ஏஸ். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சூதாட்டம், கொள்ளை போன்ற நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் இது ஒரு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்கள் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த மே மாதம் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்து இணைந்து பணியாற்றுவதை பற்றி பேசி முடிவு எடுத்து இருக்கிறார்கள். விரைவில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.

Trending News