திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

10 வருடங்கள் ஆகியும் விஜய் சேதுபதி நடிக்க ஏங்கும் 2 படங்கள்.. தமிழ் சினிமா அடையாளம் கண்ட ஹீரோ

ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக உருவெடுத்து இருக்கிறார். இவர் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களும், கதையும் தான் அவரை இன்று ஒரு முன்னணி நடிகர் அந்தஸ்தில் வைத்துள்ளது.

அந்த வகையில் இவர் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களை இன்றளவும் ரசிக்க வைக்கிறது. இப்படி குறிப்பிட்டு சில திரைப்படங்களை கூறினாலும் விஜய் சேதுபதி இந்த இரண்டு படங்களில் மீண்டும் நடிக்க ஏங்கி வருகிறாராம். அவரை அடையாளப்படுத்திய அந்த இரண்டு திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also read:18 வயது பையனாக அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய்சேதுபதி.. ட்ரெண்டாகும் போட்டோ

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பும், ஓவர் மேக்கப்புடன் இருக்கும் ஹீரோயினை பார்த்து ப்பா யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டு இருக்கு என்று அவர் சொல்லும் அந்த வசனமும் ரசிகர்களிடையே வெகு பிரபலம் ஆனது.

விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய அளவில் புகழை தேடி தந்த இது போன்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க அவர் மிகவும் ஆசைப்பட்டு வருகிறாராம். அதனால் விரைவில் அவரை இது போன்ற ஒரு கலக்கல் காமெடி கதாபாத்திரத்தில் நாம் காணலாம்.

Also read:தெரியாம 3வது ஆளாக வந்து மாட்டிக்கிட்டேன்.. ஓவர் டார்ச்சரால் விஜய் சேதுபதிக்கு வந்த தலைவலி

சூது கவ்வும் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். பிளாக் காமெடி திரைப்படமாக வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இரண்டு கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 36 கோடி வரை வசூல் லாபம் பார்த்தது. சொல்லப்போனால் இந்த படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த படத்தில் நடித்த அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க அவர் பயங்கர ஆர்வத்துடன் இருக்கிறார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் துவங்கப்படுவது சாத்தியம் என்றால் மீண்டும் அந்த நால்வரின் கூட்டணி இணையும் வாய்ப்பு இருக்கிறது.

Also read:எரிச்சலடைந்த விஜய்சேதுபதி.. கட் அண்ட் ரைட்டா டபுள் சம்பளம் கேட்டு வாக்குவாதம்

Trending News