Maharaja Movie Collection: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா நேற்று வெளியானது. நட்டி நடராஜ், அபிராமி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ் என பலர் இதில் நடித்துள்ளனர்.
ட்ரெய்லரிலேயே யாருதான்பா அந்த லட்சுமி என பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தது இப்படம். அதை அடுத்து நேற்று முதல் காட்சிக்கு பிறகு வெளிவந்த விமர்சனங்களும் பாசிட்டிவாக இருந்தது.
அதனாலேயே படம் மிகப்பெரிய அளவில் கலெக்ஷனை தட்டி தூக்கும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது மகாராஜாவின் கஜானா முதல் நாளில் அமோகமாக நிரம்பி இருக்கிறது.
Vijay Sethupathy
Anurag Kashyap
Mamta mOHANDAS
Natty Natraj
Bharathiraja
Abhirami
அதன்படி காலை காட்சியை பொருத்த வரையில் தியேட்டர்களில் கொஞ்சம் கூட்டம் குறைவாக தான் இருந்தது. வேலை நாள் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.
மகுடம் சூடிய மகாராஜா
அதையடுத்து மதிய காட்சியில் கணிசமான கூட்டம் இருந்தது. ஆனால் மாலை மற்றும் இரவு காட்சிகளில் தியேட்டர்கள் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
அதனால் படத்தின் வசூலும் தற்போது பட குழுவை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அந்த வகையில் மகாராஜா முதல் நாளில் இந்திய அளவில் 4.50 கோடி வசூலை தட்டி தூக்கி இருக்கிறது.
மேலும் உலக அளவில் 7 கோடி வரை வசூலித்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் அதிகரிக்கும் என்று தெரிகிறது .
அது மட்டுமின்றி வார இறுதி மற்றும் திங்கட்கிழமையும் விடுமுறை நாளாக இருப்பதால் நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்கும். இது பட குழுவுக்கு சாதகமாக இருப்பதால் நிச்சயம் மகாராஜா பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மகாராஜாவாக சொல்லி அடித்த விஜய் சேதுபதி
- ஒன் மேன் ஆர்மியாக அதிரடி காட்டும் விஜய் சேதுபதி
- மகாராஜாவாக ஜெயித்தாரா நடிப்பின் ராஜா விஜய் சேதுபதி
- அட்ராசிட்டி கிளப்பிய விஜய் சேதுபதியின் 50வது படம்